+2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தின் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்களும் பெற்றோர்களும் வருந்திய செய்தி கவனத்துக்குரியதாகும். ஒரு பாடத்தைப் புரிந்துகொள்வதில் எளிமை, கடினம் இருப்பது இயல்பு. ஆனால், இன்று கடினம் என்று சொல்லப்படுவது இந்த வகையல்ல. எதிர்பார்க்கப்பட்ட வினாக்கள் அல்லது அடிக்கடி பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் இந்தத் தேர்வில் கேட்கப்படாததுதான் கடினம் என்று வரையறுக்கப்படுகிறது.
பாடத்திட்டத்துக்கு உட்பட்டு புத்தகத்திலிருந்து கேட்கப்பட்ட வினா எந்த வகையில் கடினமாகும்? அறிவு சார்ந்த கல்வியும், தேர்வுமாக அல்லாமல் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தேர்வில்தான் இதுபோன்ற சிக்கல்கள் உருவாகின்றன. மதிப்பெண்களை மையமாகக்கொண்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமுதாயத்தால் தொடுக்கப்படுகின்ற மன அழுத்தங்களைத் தாங்க இயலாது, உளவியல்ரீதியாகப் பாதிக்கப்படுவது மாணவ - மாணவியர்தான். கற்றல் - கற்பித்தலில் புதிய முறையினைப் புகுத்தி, மதிப்பெண் சாராத தேர்வுமுறைதான் இதற்கான தீர்வாகவும், வருங்காலச் சந்ததியினருக்குச் சிறந்த கல்வியையும் வழங்க இயலும்.
- சு.தட்சிணாமூர்த்தி, பி.என்.புதூர், கோவை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago