எல்லா உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை உண்டு. அதனால் அவை கல்வி உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டவையே. அச்சட்டத்தின்படி அங்கீகாரம் இல்லாது செயல்படும் பள்ளிகள் ரூ.1 லட்சம் வரை அபராதத்துக்கு உட்படுவதோடு, தொடர்ந்து அங்கீகாரம் பெறாது செயல்பட்டால் நாளொன்றுக்கு
ரூ. 10,000-ம் அபராதம் செலுத்த வேண்டும். இவ்வாறு எவ்வித அபராதமும் எந்த பள்ளியும் செலுத்தாது செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றதென்றால், கல்வித் துறையின் மெத்தனப்போக்கைப் புரிந்துகொள்ளலாம். பல்கலைக் கழகத்தோடு இணைந்திருந்த மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் குழுவே மெட்ரிக் பள்ளி விதிகளை உருவாக்கி, அரசின் ஒப்புதலைப் பெற்று, மெட்ரிக் கோட் அரசாணையாக வெளியிடப்பட்டது.
அவர்கள் வகுத்த விதிமுறைகளையே ஏற்காது செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல. அங்கீகாரம் இல்லாது செயல்படும் 746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது, தேர்வுக்கு ஆயத்தப்படும் தனிப் பயிற்சி மையங்களாகப் பள்ளிகளும் ஆகிவிடக் கூடாது. கல்வியின் நோக்கங்கள் அனைத்தும் மாணவரைச் சென்றடைய வேண்டுமென்றால், எந்த நிபந்தனையையும் தளர்த்தாது விதிமுறைகளை மீறிய பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதைத் தடை செய்வதோடு கல்வி உரிமைச் சட்டத்தின்படி அபராதத் தொகையையும் வசூல் செய்ய வேண்டும். என்.சி.ஈ.ஆர்.டி நடத்திய திறன் ஆய்வுத் தேர்வில் தமிழ்நாடு கடை மாநிலமாக அமைந்திட விதிமீறல்களே காரணம்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago