காமராஜரைப் பற்றிய கட்டுரை அற்புதம். ‘இவர்கள் எல்லாம் தேவ புருஷர்களோ’ என்று நினைக்கும்படி இருக்கிறது இன்றைய சூழல். வடநாட்டில் ஒரு ஊரில் காமராஜர் தமிழில் பேசினார். மொழிபெயர்ப்பாளர் இல்லை. அவருடைய பேச்சைக் கவனமாகக் கேட்டு, பலமாகக் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்கள் அம்மக்கள். ‘அவர் பேசியது உங்களுக்குப் புரிந்ததா?’ என்று ஒரு நிருபர் கேட்க ‘புரியவில்லைதான், ஆனாலும் அவர் எங்களுக்கு ஏதோ நல்லது சொல்கிறார் என்பது தெரிகிறது.
அதனால் எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அன்று புரியாத மொழியில் பேசினாலும் புரிந்தது; இன்று புரியும்படி பேசினாலும் புரியவிலை. அன்று, தலைவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவான ஒற்றுமை என ஒன்று இருந்தது - எளிமையான வாழ்க்கை... நிஜமான தேச பக்தி... சுயநலமின்மை! இன்றைய இளைஞர்களுக்கு இதைப் போன்ற கட்டுரைகள் மிகவும் அவசியம்!
- எஸ். கோகுலாச்சாரி, ஆசிரியர், ‘ஆலய தரிசனம்’ மாத இதழ், புவனகிரி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago