‘வாராக் கடனை வசூலிக்க, மேலும் கடன் தந்து புத்துயிர் ஊட்டுதல், கடனைத் திருத்தி அமைத்தல்’ போன்ற இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிமுறைகளை எல்லா நிறுவனங்களும் பின்பற்றுவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதாகவே தெரிகிறது. உதாரணத்துக்கு, வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிட வேண்டி உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் ஏன் வங்கிகள் வெளியிட அச்சப்படுகின்றன? அரசு தலையீடா அல்லது அரசியல் தலையீடா? சிறு கடன்தாரர்களை மிரட்டி, விரட்டி வாங்கும் வங்கிகள், பெரு நிறுவனங்கள் வாங்கிய கடன்களை வாராக் கடன்களென ஒரு பெரும் தொகையைக் கணக்கில் காண்பித்துக்கொண்டிருக்கின்றனவே ஏன்?
வாராக் கடன் நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்யவும், வெளிநாடு சென்றுவிடாமல் தடுக்கக் கோரிக்கை விடும் முயற்சிகளையும் மற்ற வங்கிகள் ஏன் செய்வதில்லை? மக்களின் வரிப் பணம், அரசு அனுமதி யோடு வங்கிகளின் மூலமாக வாராக் கடன்கள் வழியாக, தள்ளுபடி என்ற பெயரில் பெரிய நிறுவனங்களுக்குப் போய்ச் சேர்கின்றனவோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
- சாமி. குணசேகர், அம்மாசத்திரம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago