ரிச்சர்ட் ஆர்.வர்மா எழுதிய, ‘காசநோயிலிருந்து மீள்வோம்!’ கட்டுரை படித்தேன். வறுமைக்கும் காசநோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தியாவில் வறுமையை ஒழிக்காமல் காசநோய் போன்ற தொற்று நோய்களை ஒழிக்கவே முடியாது. வெறும் மருந்து மாத்திரைகளால் மட்டுமே காசநோயைத் தடுத்துவிட முடியாது. காசநோய் பரவுவதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை காசநோய் மிக எளிதாகத் தாக்கும். இந்தியாவில் 42 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
உலகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் மூன்று குழந்தைகளில் ஒன்று இந்தியக் குழந்தை. இந்த நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தேசிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ16 ஆயிரம் கோடியிலிருந்து சரிபாதியாக வெறும் 8 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து மதிய உணவு திட்டமும் சீரழிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நிலைமை இந்தியாவில் காச நோய் தாக்குதல், மரணங்கள் அதிகரிக்கத்தான் வழிவகுக்கும்.
மா.சேரலாதன், மாநில செயலாளர்,
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago