இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்குகின்றன. நான் பயின்ற காலத்திலும், நான் ஆசிரியப் பணியில் சேர்ந்து நெடுங்காலம் வரையிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை தொடங்கும். பல்கலைக்கழக இளங்கலைத் தேர்வுகளும் அதே நாளில் தொடங்கும். பின்னர் இந்த முறை மாறியது. முன்னர் இரு வேளைகளிலும் தேர்வுகள் நடைபெற்று வெள்ளிக் கிழமை காலையுடன் தேர்வுகள் முடியும். பழைய நடைமுறை பற்றி சில மாணவர்களிடம் சொன்னபோது ஆச்சரியமடைந்தனர்.
இப்பொழுது அதே ஏழு தாள்களுக்கு ஏறக்குறைய ஒரு மாதம் தேர்வுகள் நடக்கின்றன. நான் கிராமப்புறப் பள்ளியில் பணியாற்றியபொழுது மாணவர்களை 20 கி.மீ. தொலைவிலிருந்த தேர்வு மையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மாணவிகளை அங்கிருந்த அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விடுதியிலும், மாணவர்களை ஒரு வங்கி மாடி கூட்டரங்கிலும் தங்க வைத்து தினமும் அவர்களை மையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எனக்கும் அதே மையத்தில் தேர்வுக் கண்காணிப்புப் பணி. வெள்ளி மாலையில் மாணவர்கள் சினிமா காட்சிகள் இரண்டு பார்த்துவிட்டு ஊர் திரும்புவர்.
எனக்கு தினத்திற்கு ரூ 2 வீதம் மூன்றரை நாட்களுக்கு ரூ 7 ஒராண்டு கழித்து மணியார்டர் கழிவு நீங்கி 6 ரூபாய் 15 அணா மதிப்பூதியமாகக் கிடைக்கும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது நல்வாழ்த்துகள்.
- ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சென்னை-93.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago