சரித்திரம் திரும்ப வாய்ப்பளித்துவிடாதீர்கள்!

By செய்திப்பிரிவு

‘மக்களின் சொத்துகள் காக்கப்பட வேண்டும்’ என்ற தலையங்கம் நாட்டில் வரவிருக்கும் பேராபத்தின் எச்சரிக்கை மணி. பொதுத்துறை நிறுவனங்களை விற்பது தவறு. நிதி நிலைமையைச் சீரமைக்க ஆயிரம் வழிகள் இருந்தும் இந்தப் பாதையைத் தேர்தெடுத்தது ஏன்? பாஜக அரசால் பொது நிறுவனங்களை லாபத்துடன் இயக்க முடியவில்லை என்றால், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மட்டும் எப்படி ஏற்றம் தர முடியும்? அன்று ஆங்கிலேயர்கள் நம்மைச் சுரண்டினார்கள்;

இன்று, நம்மில் ஒருவரே இந்தியாவைச் சுரண்டுகிறார். பொதுத்துறையில் வேலை செய்பவர்களும் மக்களுக்காக உழைக்கிறோம் என்று நினைக்க வேண்டும். அப்போதுதான், அவர்களுக்காகக் குரல்கொடுக்க மக்களும் முன்வருவார்கள். திறமையான நிர்வாகத்தை ஊழல் இல்லாத இடத்தில்தான் காண முடியும். பொதுத்துறை நிறுவனங்கள் அரசாங்கத்தின் கைப்பிடியில் இருந்தால்தான் நாட்டை ஆட்சி செய்ய முடியும்.

இல்லையென்றால், நிறுவனத்தை வாங்கும் முதலீட்டாளர்கள்தான் அரசாங்கத்தை ஆட்சி செய்யும் நிலை ஏற்படும். ஆங்கிலேயன் அப்படித்தானே உள்ளே வந்தான். மீண்டும் சரித்திரம் திரும்ப வாய்ப்பளித்துவிடாதீர்கள்!

- வீ. யமுனா ராணி, சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

55 mins ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்