விருதுக்கு மரியாதை

By செய்திப்பிரிவு

‘தி இந்து’வுடன் வெள்ள நிவாரணப் பணியாற்றிய மூன்று சென்னை சிறுவர்களுக்கு என்.டி.டி.வி. விருது கிடைத்திருப்பது, அந்த விருதுக்கே மரியாதையைத் தந்துள்ளது. ‘தி இந்து’வுடன் இணைந்து தமிழகம் முழுவதிலுமிருந்து நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்பிவைத்த வாசகர்களுக்கும் இது பெருமை தருகிற விஷயம்.

- சா. வெள்ளத்துரை, காரைக்குடி.



எளிமை... இனிமை!

மூத்த எழுத்தாளர் என்.ராமதுரை எழுதும் ‘எங்கே இன்னொரு பூமி’ தொடரில் 04.02.16-ல் வெளியான ‘நட்சத்திரக் கிரகணம்’ என்னும் கட்டுரையைப் படித்தேன். அறிவியல் விஷயங்களை மிக எளிமையாக விளக்கும் எழுத்தாளர்கள் இப்போது மிகவும் குறைவு. ராமதுரை எளிமையாக மட்டுமல்ல, இனிமையாகவும் விளக்குகிறார். சில விஷயங்களை அவர் விவரிக்கும் பாங்கு, பால்வெளி வீதியை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது போலவே இருக்கிறது.

- ரா.சுரேஷ் கண்ணன், தென்காசி.



துரித பாஸ்போர்ட்

‘ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய முறை அமலுக்கு வந்தது’ என்ற செய்தியைப் படித்தேன். பாஸ்போர்ட் அதிகாரிகள் சொல்வதுபோல, இது ஒன்றும் எளிமையான முறை அல்ல. ஆதார் அட்டை, அஃபிடவிட், பான் கார்டு போன்றவை எல்லாமே அரசு அங்கீகாரம் பெற்றதுதானே? பிறகு ஏன் எல்லா ஆவணங்களையும் கேட்கிறார்கள் என்று புரியவில்லை. இதற்குப் பெயர் எளிமை என்று சொல்ல முடியாது. இந்தியாவைப் போல வேறெந்த நாட்டிலும் இவ்வளவு கெடுபிடிகள் கிடையாது. சிறிய நாடான இலங்கையில் பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதையும் நமது அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- நூகுதம்பி, ‘தி இந்து’இணையதளம் வழியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்