அர்த்தமிழக்கும் பல்கலைக்கழகம்

By செய்திப்பிரிவு

தேச விரோதம் எனும் முத்திரை’(1.2.16) என்ற கட்டுரையில் மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளாதவர்களின் முகத்திரைகளைக் கிழித்துக் காட்டியிருந்தார் ஆதிஷ் தஸீர். புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் மூலம் ஒரு நாட்டையும் அறிவியலையும் வளர்த்தெடுக்க முடியும் என்று ஒருவர் எண்ணுவதில் தவறொன்றும் இல்லை. ஆனால், அது போன்றக் கருத்துகளையே மற்றவர்களும் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு. வலதுசாரி கருத்துகளுக்கு எதிரான எந்தக் கருத்துமே பல்கலைக்கழகத்தில் யாருக்கும் இருக்கக் கூடாது என்று ஒரு துணைவேந்தர் கருதுவதன் மூலம் ‘பல்கலைக்கழகம்’ என்ற சொல்லையே அர்த்தமிழக்கச் செய்துவிடுகிறார்.

வலதுசாரியான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சந்தீப் பாண்டேயை இடதுசாரி என்று முத்திரை குத்துவதில் தவறில்லை. ஆனால், மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும் அனைவரையுமே தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்துவதன் மூலம், வலதுசாரிகள் அனைவருமே தேசபக்தர்கள் ஆகிவிடப்போவதில்லை. மாற்றுக் கருத்துகளையும் மாற்றுக் குரல்களையும் வன்முறை கொண்டும் அதிகாரம் கொண்டும் அடக்கிவிட்டு, நாடு முழுவதும் ஒற்றைக் கருத்தியலை நிறுவலாம் என நினைப்பது இந்தியாவின் பன்மைத் தன்மைக்கு நிச்சயம் ஊறு விளைவிக்கவே செய்யும்.

- மருதம் செல்வா, திருப்பூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்