மாநிலப் பட்டியலில் கல்வி

By செய்திப்பிரிவு

மருத்துவக் கல்லூரிகளுக்கு நாடு முழுமைக்கும் ஒரு பொது நுழைவுத் தேர்வு என்ற யோசனையைத் தமிழ்நாடு ஏற்காது என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அது மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாகும் என்ற வாதம் செல்லுபடியாக வேண்டுமெனின், அரசியல் சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் வகையில் திருத்தம் கொணரப்பட வேண்டும். இது தொடர்பாகப் பிற மாநிலங்களோடு தொடர்புகொள்ளுதல் வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் தொடக்கக் கல்வியையே அனைவருக்கும் வழங்காத நிலை தொடர்கின்றது. கல்வி அளிப்பில் சமத்துவம் என்றில்லாதபோது, பொது நுழைவுத் தேர்வைப் பற்றி யோசிப்பதே அறிவுடைமையாகாது. நுழைவுத் தேர்வுகள் கல்வி மறுப்புக்குத்தான் வழிவகுக்கின்றன. மாணவரது இயற்கை அறிவைச் சோதிப்பதில்லை. மாறாக, பள்ளியிலும் சிறப்புப் பயிற்சி நிறுவனங்களிலும் திணிக்கப் பெற்ற செயற்கை அறிவே வெற்றிக்கு உதவுகின்றது என்பது வரலாறு கூறும் உண்மை. பொது நுழைவுத் தேர்வுப் பயிற்சி மையங்களை வளர்க்கவே உதவும்.

- ச.சீ. இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

43 mins ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்