‘மனிதப் பேரவலம்’, ‘உங்கள் தேசியத்தில் சென்னை இல்லையா?’ கட்டுரைகளைப் படித்தேன். அந்தக் கட்டுரைகளின் மூலம் அரசியல்வாதிகளின் உண்மையான முகத்தையும், இதுவரை சென்னை பார்த்திராத மனிதநேயத்தையும் பார்த்தேன்.
அதேபோல, சென்னை வெள்ளச் செய்தியைவிட ஷீனா போரா கொலை வழக்கும், அமீர்கானின் சகிப்புத்தன்மையும் இந்தியாவின் முக்கியச் செய்திகளாக வட இந்திய ஊடகங்களுக்குத் தோன்றிவிட்ட கொடுமையையும் பார்த்தேன். இந்தச் சூழலில், ‘தி இந்து’வின் பணி பாராட்டுக்கு உரியது.
உண்மையான செய்திகளை வெளியிடுவதோடு நில்லாமல், தன் சமூகக் கடமையாக வலியோரை இணைத்து எளியோருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வைத்த அக்கறை மகத்தானது. ‘தி இந்து’வுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
- ஜீவன், கும்பகோணம்.
***
மழை கற்பிக்கும் பாடம்!
‘மழை வெள்ளம் கற்பிக்கும் பாடம்’ எனும் தலையங்கம் ஆழ்ந்து சிந்திக்க வைப்பதாக அமைந்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டிய அவசியத்தை சென்னை வெள்ளம் உணர்த்துவதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
அளவுக்கு அதிகமான மழையும் வெள்ளமும் வேண்டுமானால் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவை ஏற்படுத்தியுள்ள சேதமும் பாதிப்புகளும் நகர மயமாக்கலின் காரணமாகவும், திட்டமிடாத வளர்ச்சியின் காரணமாகவும்தான் ஏற்பட்டிருக்க முடியுமே தவிர, வேறு காரணங்களால் அல்ல என்பதையும் நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.
மழை நீர் வெளியேற வேண்டிய பாதைகளை எல்லாம் அடைத்துக் கட்டிடங்கள் கட்டியதும், அதற்கு அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு அனுமதி வழங்கியதும் முக்கியக் காரணங்கள் என்பதை நாம் உணரத் தவறினால், மீண்டும் இதுபோன்ற சீரழிவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். இதுபோன்ற நேரங்களில் துரிதமாக நிவாரணப் பணிகளைச் செய்ய வேண்டிய அரசு நிர்வாகம் மெத்தனப்போக்கைக் காட்டுவது குறித்து மக்கள் மிகவும் கவலை கொண்டிருக்கிறார்கள்.
- எஸ். தணிகாசலம், கோபிசெட்டிபாளையம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago