பூப்பாதையா? சிங்கப்பாதையா?

By செய்திப்பிரிவு

‘கருத்துப் பேழை’ பகுதியில் வெளியான ‘இரு வழியில் நாம் எந்த வழி?’ என்ற கட்டுரை நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாய் உள்ளது.

பெட்ரோல் விலை உயர்ந்தால் காட்டுக்கூச்சல் போடும் நாம்தான் அதிகாலையில் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு அமைதியாய்ச் சென்றுவிடுகிறோம். தெருவில் நின்று போராடுபவர்களை ‘வேறு வேலை இல்லை!’ என புறந்தள்ளுகிறோம்.

கண் முன்னே நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்காமல் இணையத்தில் மட்டும் போராடுகிறோம். வீதியின் மத்தியில் இருக்கும் டாஸ்மாக், திரையரங்கில் அதிகக் கட்டணம், தனியார் மருத்துவமனையில் அதீதக் கட்டணம், தரமற்ற பொருள் விற்பனையைப் பார்க்கும்போது புழுங்கிப் புழுங்கி ‘இங்கே இப்படித் தான்’ என மனதைச் சமதானப்படுத்துகிறோம்.

ஒரு எண்ணமோ கருத்தோ உருப்பெற்றவுடன் அதை மழுங்கடித்துவிடுகிறோம். மேலிருந்து வருவது சீர்திருத்தம், கீழிருந்து வெடிப்பது போராட்டம். போராட்டம் செய்யாமல் பூப்பாதையில் செல்கிறோம். சிங்கப்பாதையை வேடிக்கை பார்த்துக்கொண்டு!

- ப. மணிகண்டபிரபு, திருப்பூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்