பயனுள்ள புத்தாண்டுப் பரிசு

By செய்திப்பிரிவு

புத்தகங்களைவிட அழகான பயனுள்ள பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது.

புத்தகத் திருவிழா நடத்த வேண்டிய பொன்னான பொழுதில் இன்று பதிப்புத் துறை புண்பட்டுப்போயிருக்கிறது என்ற செய்தி மிகவும் வருத்தமானது. நெசவுத் தொழில் நசிந்து, கைத்தறித் தொழிலார்கள் பாதிக்கப்பட்டபோது, தமிழகக் கல்லூரி மாணவ - மாணவியர் ஒருநாள் கைத்தறி ஆடை அணிவோம் என்று முடிவெடுத்து, கல்லூரி மாணவர் பேரவைகள் மூலமாக கைத்தறிச் சந்தைகளைக் கல்லூரிகளில் நடத்தி அனைத்து மாணவ - மாணவியரையும் வேட்டி, சேலை வாங்கி அணியவைத்த அரிய நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

தமிழகக் கல்லூரிகள், பள்ளிகள் அனைத்திலும் புத்தகத் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பதிப்பகங்களின் நூல்களையும் வாங்கி அவர்களுக்கு உதவலாம். அறிவுக் கருவூலங்களான எழுத்தை நமக்கு நாளும் தரும் பதிப்பகங்கள் இக்கட்டான சூழலில் உள்ளநிலையில் நாம் செய்யும் இந்தப் பேருதவி அவர்களை மேலே தூக்கிவிடும்.

பள்ளிக் கல்வித் துறை, கல்லூரிக் கல்வித் துறையும் இதற்கு உதவ வேண்டும். திருமண வீடுகளில் நல்ல நூல்களை மணமக்களுக்குப் பரிசளிக்கலாம். அனைத்து விழாக்களிலும் பொன்னடைகளுக்குப் பதிலாக இனி நூல்களைப் பரிசளிக்கலாம். ‘தி இந்து’ குறிபிட்டதைப் போல புத்தாண்டு அன்று நாம் சந்திக்கும் அனைவருக்கும் புத்தகங்களைப் பரிசளிக்கலாம்.

சுழற்கழகம், அரிமா சங்கம் போன்ற அமைப்புகள் நல்ல நூல்களை மொத்தமாக வாங்கி அரசு நூலகங்களுக்குப் பரிசளிக்கலாம். இப்போது செய்யாவிட்டால் எப்போது செய்வது… நாம் செய்யாவிட்டால் யார் செய்வது?

- முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த் துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்