தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி, காங்கிரஸின் மூத்த அரசியல்வாதியும் காந்திஜியின் தொண்டருமான குமரிஅனந்தனும் மற்றும் அகில இந்திய மதுவிலக்குப் பேரவையைச் சேர்ந்தவர்களும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுமார் 800 கி.மீ. நடைப்பயணம் எனும் அறவழிப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
இதற்குப் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவை நல்கியிருப்பதால், தமிழக மக்களுக்கு விரைவில் ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. ‘தி இந்து’வில் தொடர்ந்து வெளிவந்த ‘மெல்லத் தமிழன் இனி’ என்ற எழுத்துப் பயணம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, குமரி அனந்தனால் தொடங்கப்பட்டுள்ள விழிப்புணர்வு நடைப்பயணமும் மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும் என்பதைப் போல், மனிதன் நல்ல உடல் நலத்தோடு இருந்தால் மட்டுமே அவனால் மனநிறைவோடு வாழ முடியும்.
மனைவி மக்களையும் மகிழ்ச்சியாக வாழ வைக்கவும் முடியும். தள்ளாடும் கணவனால் தள்ளாடும் குடும்பத்தின் நிலைமையை எண்ணியதால் மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டுமென அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எண்ணற்ற காந்தியவாதிகளும், பொது நல விரும்பிகளும், சமுதாய சீர்திருத்தவாதிகளும் தொடர்ந்து போராடிவருகின்றனர்.
மதுவிலக்கை அமலுக்குக் கொண்டுவருவதையே தனது வாழ்வின் குறிக்கோளாகக்கொண்டு போராடிய காந்தியவாதியான சசி பெருமாள் தனது உயிரை இழந்தபோது ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவரும் முடிவைப் பல்வேறு கட்சிகள் எடுத்ததற்கு அஸ்திவாரமாய் அமைந்தது.
தன்னுடைய தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல், ‘நமது இலக்கு, மது விலக்கு’ என்பதையே தனது கொள்கை முழக்கமாகக்கொண்டு, மக்களைச் சந்திக்கவுள்ள, இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் லட்சியப் பயணம், வெல்லட்டும். ‘மெல்லத் தமிழன் இனி’யாவது மயக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளட்டும்!
- கு.மா.பா. கபிலன், சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago