மக்கள் எழ வேண்டும்

By செய்திப்பிரிவு

சென்னை, சேலம், தர்மபுரி, கடலூர், தூத்துக்குடி என மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு அங்குமிங்கும் பறந்து அனல் பறக்கச் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் புள்ளிவிவரங்களைத் துல்லியமாகத் தரும் ‘தி இந்து’வின் செயல்பாடுகள் பிரமிக்கவைக்கின்றன.

இதேபோல அரசு நிர்வாகம், அமலாக்கம் செய்யும் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப், பணிபுரிந்தால் தமிழகத்தின் தண்ணீர், மழை வெள்ளம் பிரச்சினைகள் தீர நீண்ட நாட்கள் தேவையில்லை.

கட்டுரை வந்த மறுநாளே அரூர் ஏரி தூர்வாரப்படுகிறது எனப் புகைப்படத்துடன் வந்த செய்தி மகிழ்ச்சியடைய வைத்தது. தொடரட்டும் தமிழக மக்களுக்கான பொதுப்பணி. இனி, நம் ஊரிலுள்ள குளங்களிலும் ஏரிகளிலும் குப்பைகளையோ, கட்டிடக் கழிவுகளையோ பஞ்சாயத்தோ, நகராட்சியோ, மாநகராட்சியோ கொட்ட ஆரம்பிக்கும்போதே சுற்று வட்டார மக்கள், குழுக்கள், அமைப்புகள் விழித்துக்கொண்டு எதிர்த்துப் போராட வேண்டும். தும்பை விட்டு வாலைப் பிடிக்கக் கூடாது.

- சாமி. குணா, அம்மாசத்திரம்.

***

தவறு செய்வது யார்?

‘ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு’ தொடரில் தூத்துக்குடி துயரத்துக்குக் காரணம் என்ன என்பதைத் துல்லியமாகக் கட்டுரையாளர் விளக்கியிருந்தார். தூத்துக்குடியின் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் பல கண்மாய்களும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.

அக்கரைக் கண்மாய், புலிப்பாஞ்சான் குளம் ஆகியவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.

வெள்ளநீர் வடிகாலான பக்கிள் ஓடை சீரமைக் கப்பட்டிருந்தாலும் அதில் குப்பைக் கூளங்கள் கொட்டப்பட்டு தண்ணீர் செல்லும் வேகம் குறைந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்து 10 நாட்களாகியும் தண்ணீர் வடியாததற்கு இதுவே முக்கியக் காரணம். தூத்துக்குடி மாவட்டத்தில் குளங்களைத் தூர்வார எவ்வளவோ நிதி ஒதுக்கியும் வேலைகள் நடைபெறாததற்கு மாவட்ட நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

உடனடியாக நீர் நிலை களைத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே இது போன்ற இன்னொரு துயர சம்பவம் ஏற்படாமல் தவிர்க்க முடியும். மனிதர்கள் தவறு செய்துவிட்டு தண்ணீரைக் குற்றம் சொல்லிப் பயனில்லை.

- ரா. பொன்முத்தையா,தூத்துக்குடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்