வெள்ளச் சேதத்துக்குப் பிறகு வரும் கட்டுரை என்பதால் இந்த வாரம், ‘அப்புறம் என்னாச்சுன்னா..’ தொடரில் வழக்கமான நகைச்சுவையும், கிண்டலும் நிச்சயம் இருக்காது என்று நினைத்தேன். ஆனால், அதே கிண்டலும், நகைச்சுவையும் இருந்தது. அதேநேரத்தில், மவுனமாக இழையோடிய வருத்தத்தையும் உணர முடிந்தது. வரலாற்றில் பொன் ‘ஸ்டிக்கர்’களால் ஒட்டப்பட வேண்டிய செய்தி, ‘தமிழ்நாடு பூராம் ஒரே நாள் ராத்திரியில 4 கோடி வாக்காளர்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லாம ‘உதவி’ பண்ணிய அனுபவம் இருக்கு’ என்று அனைத்துத் தரப்புக்கும் கொட்டு (குட்டு) விழுந்துகொண்டே இருந்தது.
நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற உத்தரவினால் தொகை வாங்கக் கூட்டம் இருக்காது. ஆனால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இப்போதே யோசித்துச் செயல்பட வேண்டும் என்று அரசுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை வரவேற்கத்தக்கது. அந்த ‘எச்சரிக்கை’கள் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்பது ஆள்பவர்களுக்கே வெளிச்சம்.
- வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago