உண்மையான படிப்பு

By செய்திப்பிரிவு

நான் பி.எட்., படிக்கிறேன். அந்தப் படிப்பு எனக்கு ஏராளமான அறிவைக் கொடுத்திருப்பதாகவும், படிக்காதவர்களுக்கு இந்த சமூகத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன்.

என்னுடைய அத்தனை அகங்காரமும் மண்ணாகட்டும் என்று மனிதர்கள் கட்டுரையைப் படித்தவுடன் சாபமிட்டேன். ஒரு நாளில் ரயிலில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள், பஸ்ஸில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் போன்ற புள்ளிவிவரங்களுடன், அரசுப் பேருந்தின் லாப நஷ்டங்களை ஓட்டுநர் ஜெயராமன் அண்ணன் அளித்த விளக்கம் அற்புதம்.

இதுதான் அண்ணா உண்மையான படிப்பு. 20 வருடமாகப் படிக்கிற எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. ரம்ஜான், தீபாவளி, பொங்கல் என்று அத்தனை பண்டிகை விடுமுறைகளிலும் பேருந்தில் ஊர் சுற்றும் எனக்கு, அதனை ஓட்டும் டிரைவர், கண்டக்டர்களுக்கும் அன்று பண்டிகைதானே என்ற உணர்வு இப்போதுதான் வந்துள்ளது. ஜெயராமன் அண்ணா அவர்களை என்னோடு பேச வைத்த ‘தி இந்து’வுக்கு நன்றி.

- சபீர் அகமது,கோவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்