மழையும் பள்ளித்தேர்வும்!

By செய்திப்பிரிவு

‘அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்’ என்பதுபோல, ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கற்றலும் கற்பித்தலும் நடந்தாலும், நடைபெறாவிட்டாலும் தேர்வுகள் நடந்தே தீரும் என்பது தமிழகக் கல்வித் துறையின் அணுகுமுறையாக இருக்கிறது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புத்தகங்களுக்குப் பதிலாகப் புதிய புத்தகங்கள் வழங்கிவிட்டால் போதுமா? நாள் தோறும் எழுதிய குறிப்புகள், வினா-விடைகள் கொண்ட நோட்டுப்புத்தகங்களைப் புதிய வெற்று நோட்டுப்புத்தகங்கள் ஈடுகட்டுமா? உடல், மன அளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர் இயல்புநிலைக்கு மீள பல நாட்கள் ஆகும். அவர்கள் மீது தேர்வு என்ற ஒரு அழுத்தத்தைத் திணிப்பது குரூரச் செயலாகும்.

அனைத்து மாணவரும் வெவ்வேறு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும்பொழுது ஒரு பொதுத் தேர்வை நடத்துவதற்கு மாறாக அந்தந்தப் பள்ளிகளே தம் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வது சரியானதாக இருக்கும்.

- ச.சீ. இராஜகோபாலன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்