ஹரியானா பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மகளிர் போட்டியிட 5-ம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்த தலையங்கம், அங்குள்ள பெண்களில் 68% பேர் 5-ம் வகுப்பைத் தாண்டாதவர்கள் என்று தெரிந்தேதான் இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
பெண்களுக்கான கல்வி அறிவை வழங்க வேண்டிய அரசு, அதில் முனைப்புக்காட்டி அவர்களின் கல்வியறிவு சதவிகிதத்தை உயர்த்த முற்படாமல், பெரும்பான்மையானோர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்குமாறு சட்டமியற்றியது எதற்கு? ஒருவேளை, இப்படிச் சட்டம் இயற்றினால்தான், மகளிர் அனைவரும் கல்வி கற்க முன்வருவார்கள் என அரசு நினைக்கிறதோ? மகளிருக்கு 30% இடஒதுக்கீடு என்று கூறிவிட்டு, இப்போது ஹரியானாவில் மொத்த மகளிரில் 30 சதவிகிதத்தினர் மட்டுமே 5-ம் வகுப்புக்கு மேல் படித்துள்ளனர் என்பதால், அவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிட்டால்தான் மகளிருக்கான 30% இடஒதுக்கீட்டினை அடைய முடியும்.
இதெல்லாம் சாத்தியமா? இந்த சட்டமும் ஒரு வகையான அடக்குமுறைதான் என்று எண்ணத் தோன்றுகிறது.
வீ.சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago