தலைவர்களுக்கான இலக்கணம்!

By செய்திப்பிரிவு

அரசியல் வாரிசுக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையில் இருக்கும் பெறும் வேறுபாட்டை ’நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்?’ கட்டுரை துல்லியமாகப் புரியவைத்தது. நேருவை காந்தி வாரிசாகத் தேர்ந்தெடுத்தபோதும் எண்ணத்திலும் செயல்பாட்டிலும் இரு தலைவர்களுக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருந்தன. எளிமை, தன்னடக்கம், சமத்துவம் எல்லாம் தேவை தான்.

அதற்காக உடலை வதைத்துக்கொள்வதை (உண்ணாவிரதம்) நான் ஏற்கமாட்டேன் என்ற நேருவின் கூற்றே இதற்குச் சான்று. நேருவின் நவீனமயமாக்கலுக்கும் காந்தியின் பழமையான உத்திகளுக்கும் நடுவில் வேறுபாடுகள் நிறையவே காணப்படுகின்றன. இருப்பினும் காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டதுபோல் "நாம் இருவரும் இந்தியாவின் சுதந்திர லட்சியத்துக்காக உயிர் வாழ்கிறோம். தேவையெனில் அதற்காக உயிர் துறப்போம்" என்ற பொது நோக்கு அவர்களிடையே எப்போதும் அணையாச் சுடராக ஒளி விட்டுக் கொண்டிருந்தது. இன்றைக்கு அப்படிப்பட்ட தலைவர்கள் இல்லாதது பெரும் குறை!

- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்