கருத்துச் சுதந்திரம்?

By செய்திப்பிரிவு

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகரான கோவன், டாஸ்மாக் தொடர்பான பாடலுக்காக தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும்போது ‘உம் பாடலில் பிழை இருக்கிறது கோவன்!’ கட்டுரை கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி அட்டகாசமாக அலசுகிறது. ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோர் முதல்வராக இருந்தபோது, அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்துப் பேசியோரின் கருத்துக்கு எவ்வாறெல்லாம் மதிப்பளித்தனர் என்பதையும், இப்போது கருத்துச் சுதந்திரத்துக்கு விடப்படும் சவால்களையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் எனப் பல காலமாகப் போராடிய காந்தியவாதி சசிபெருமாள், முடிவில் தன் உயிரையே தாரை வார்த்தபோதும், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் இருக்கின்ற இடங்களுக்கு அருகே உள்ள மதுக் கடைகளை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெண்களும், சமூக அமைப்புகளும் தொடர்ந்து போராடி வரும்போதும், செவிசாய்க்க மறுப்பவர்களின் சிந்தனையில் பதியும்வண்ணம், சாமர்த்தியமாக “டாஸ்மாக் கல்லாதான் அரசோட கல்லா, ஆளுங்கட்சியோட கல்லாங்கிற அடிப்படை உண்மையைக்கூடப் புரிஞ்சிக்காம பாடுதீரே, இது நியாயமா?” என்ற வினாவை எழுப்பிய கட்டுரையாளருக்கு சபாஷ்!

- கு.மா.பா. கபிலன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்