தயவுசெய்து துண்டாடாதீர்கள்!

By செய்திப்பிரிவு

அசோகச் சக்ரவர்த்தியிடம் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருந்தும், அவர் சார்ந்த சாதியைப் பயன்படுத்தி வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த மாதிரி கொச்சை அரசியலை மோடியிடமோ, பாஜகவிடமோ நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கவில்லை. மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, அஹிம்சை போன்ற எண்ணற்ற நல்ல விஷயங்கள் பல இருக்க, அவர் எந்தச் சாதி என்று ஆராய்ச்சி செய்து, உலகத்தினர் உயர்வாகப் போற்றும் ஒரு பேரரசரை சாதி வளையத்துக்குள் சிக்கவைப்பது அவருக்கு இழைக்கும் பெரிய அவமானம்.

இந்த வரிசையில் ஏற்கெனவே பல இந்தியப் பெருந் தலைவர்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிடப் பெரிய கொடுமை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பல நாடுகளை வென்று சரித்திரம் படைத்த ராஜராஜ சோழனையும் இந்த சகதிக்குள் சிக்க வைத்த நாம் வெட்கித் தலைகுனிய வேண்டியவர்கள்தான். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகத்தை ஒட்டுமொத்தமாக இணைத்த இந்த அன்பு தேசத்தை அரசியலுக்காக, வாக்குக்காக சாதி, மதம், மொழி எனும் ஆயுதங்கள் கொண்டு தயவுசெய்து துண்டாடாதீர்கள்.

- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

‘அசோகருக்கு இதுவா அடையாளம்’ கட்டுரை படித்தேன். மாமன்னர் அசோகர் குஷ்வாஹா சாதியைச் சேர்ந்தவர் என்பதன் மூலம் பிஹாரில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள குஷ்வாஹா மக்களின் ஓட்டுக்களைப் பெரும் முயற்சியை பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தேர்தல் நேரத்தில் மேற்கொண்டது. இத்தகைய முயற்சியை மற்ற சில மாநிலங்களிலும் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சாவூரில் நடந்து முடிந்த ராஜராஜன் சதய விழாவின்போது சாதிச் சங்கங்கள் ராஜராஜன் வழித்தோன்றல்கள் என்று தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு, போஸ்டர் யுத்தம் நடத்தின.

பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்த மருதுபாண்டியர் சகோதரர்கள் தங்களது சாதியைச் சேர்ந்தவர்கள் என்று விளம்பரப்படுத்திக்கொண்டன சில சாதிச் சங்கங்களும் அரசியல் கட்சிகளும். இத்தகைய செயல்பாடுகள் நாட்டின் இறையாண்மைக்கும் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் அரசியல் நாகரிகத்துக்கும் எதிரானவை. இத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு.

- ப.சரவணன், கோயம்புத்தூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

47 mins ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்