ஒரு தலைநகரம் போதுமா?

By செய்திப்பிரிவு

திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது திருச்சியைத் தமிழகத்தின் தலைநகரமாக்க விரும்பினார். சில அரசியல் தலைவர்களால் அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனது. அண்டை மாநிலமான கேரளத்தில் திருவனந்தபுரம் நகருக்கு ஈடாக கொச்சி, எர்ணாகுளம் ஆகியவை உள்ளன. கர்நாடகத்தை எடுத்துக்கொண்டாலும் பெங்களூருக்கு இணையாக மைசூர் உள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் சென்னை முதல் நாகர்கோவில் வரை சென்னையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. திருச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதுடன் சென்னையில் உள்ள சில அரசு அலுவலகங்களை திருச்சிக்கு மாற்றிவிடலாம். இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், தென் தமிழகத்தையும் வட தமிழகத்தையும் இணைக்கும் பாலமாக திருச்சி விளங்கும். ஆள்பவர்களும், ஆண்டவர்களும் நினைத்தால் இது சாத்தியமாகும்.

- எம்.ஆர். லட்சுமிநாராயணன், கள்ளக்குறிச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்