‘பாரிஸ் பயங்கரம்’ தலையங் கத்தையும் ‘ஐரோப்பா இனி எப்படி இருக்கும்?’கட்டுரையையும் படித்தேன். மிகவும் முன்னேறிய அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் சுயநலத்துக்காக ஆசிய, அரேபிய நாடுகளில் தீவிரவாதக் குழுக்களை அவ்வப்போது வளர்த்தும் ஆதரித்தும் வந்தன. அதன் மூலமாக, அந்த நாட்டுக்கு ஆயுத விற்பனை மற்றும் எண்ணெய் வளச் சுரண்டல் என்று ஏகபோகமாய் அனுபவித்தன. இதைப் புரிந்துகொண்ட தீவிரவாத இயக்கங்கள், அவர்கள் பாணியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன. தங்களுக்குச் சாதகமாக இருக்கும் வரை அப்பாவி மக்களைக் கொன்று உலகில் தீவிரவாதத்தை ஒடுக்குவ தாகத் தெரிவித்துக்கொண்ட இந்த நாடுகள், தற்போது அவர்கள் வளர்த்துவிட்ட தீவிரவாதம் பாயும் போது சோகத்தில் மூழ்குகின்றன.
முன்னேறிய நாடுகளின் இந்த அகோரப் பசியால் பலியாவது அப்பாவி மக்கள் மட்டுமின்றி, சமாதானத்தை விரும்பும் நடுநிலை நாடுகளும்தான். எந்த அளவு விஞ்ஞான முன்னேற்றம் இவர்களுக்கு உதவினாலும் அதே விஞ்ஞானம்தான் தீவிரவாதிகளுக்கும் உதவும் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள். பின்னர், அதன் பலனை அனுபவிக் கிறார்கள். உலக நாடுகள் அனைத் தும் ஒன்றுபட்டு, தங்கள் சுய விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜீவன். பி.கே., கும்பகோணம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
58 mins ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago