‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ எனும் பாடலை வைரமுத்து எழுதிய வருடம் பிறந்தவர்தான் மதன்கார்க்கி. மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருக்கும் அவர், மெல்லினம் எனும் பெயரில் ஒரு நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.
2014-ல்அவர் எழுதிய 84 பாடல்களில் 63 பாடல்கள் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. மொழியின் மீது தந்தையைக் காட்டிலும் அதிக நேயம் கொண்டவர் கார்க்கி. பைனரி எனும் சொல்லை பூச்சியம் ஒன்றோடு என ஒரு பாடலில் கையாண்டிருப்பார்.
அதே போன்று ரிமோட் கன்ட்ரோலை தொலைஇயக்கி என அழகிய தமிழாக்கியும் இருப்பார். என்றாலும், பாடலுக்கான வார்த்தைகளைத் தொழில்நுட்பத்தைக் கொண்டு தேர்ந்தெடுப்பதாகச் சொல்லும் அவரின் பாணி ஏற்புடையதாய் இல்லை.
மெட்டுக்குத் தகுந்தாற்போன்று பாடல் வரிகளைத் தரும் பாடலாசிரியர்களையே கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றவர்கள் கவிஞர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.
“அம்மி கொத்த சிற்பி எதற்கு?” எனும் அவரின் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. வார்த்தைகளைக் கொட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாடல் எழுதுவது சரிதானா என மதன் கார்க்கி யோசிக்க வேண்டிய தருணம் இது.
- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago