கடந்த சில தினங்களாக ஆம்பூர் கலவரம் தொடர்பாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன.
ஆனால், பெரும்பாலான ஊடகங்களில் கலவரத்துக்குக் காரணமான ‘கள்ளக்காதல்’, ‘மாயமான பெண்’ என்றே செய்திகளை வெளியிடுகின்றன. அதேபோல, ‘கலவரத்துக்குக் காரணமான பெண் பவித்ரா’ என்ற சொல்லாடலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மாதிரியான சொற்பிரயோகங்கள் எல்லாம் ஒரு பெண்ணின் மீதான குற்றச்சாட்டுகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பெண்ணைப் பற்றி, அவருடைய மண வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றி எதையுமே விசாரிக்காமல் அவரைத் தவறாகச் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? ஆணாதிக்கத்திலும் இஸ்லாமிய, தலித் விரோதத்திலும் தோய்ந்த மனநிலையிலிருந்து வெளிப்படும் மனோபாவம் இது.
காவல் துறை இதைத் திட்டமிட்டுச் செய்கிறது.
ஊடகங்களும் காவல் துறையின் வார்த்தைகளை அப்படியே பின்பற்ற வேண்டுமா என்ன? உண்மையில், ஆம்பூரில் கலவரம் ஏற்படக் காரணம் என்ன?
விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு, காவல் துறையினரின் கொடுமைகளின் விளைவாக ஷமீல் அஹம்மது கொல்லப்பட்டதே காரணம் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.
உண்மை இப்படியிருக்க, தன் மீதான குற்றச்சாட்டை ஒரு பெண் மீது தூக்கிப்போடும் காவல் துறையின் உள்நோக்கங்களுக்கு ஊடகங்களும் துணைபோய்விடக் கூடாது.
- ஜி.ஆர். ரவீந்திரநாத், பொதுச் செயலர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்,சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago