சிறுதானிய உணவு ஆர்வலர் களுக்கு ‘சிறுதானியம் பெற்றுத் தந்த தேசிய விருது’ செய்திக் கட்டுரை ஒரு வரப்பிரசாதம்.
எனக்கு சிறுதானியங்களின் மீது அலாதிப் பிரியம். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து, என்னுடைய நண்பர்களும் இந்த உணவு முறைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
மக்களிடத்திலும் சிறுதானிய உணவுகள்குறித்த ஆர்வம் பெருகிவருவது சந்தோஷத்தைத் தருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் நடக்கும் சிறுதானிய உணவுத் திருவிழாக்கள் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
- பஞ்சநாதன், சென்னை.
***
வணிக மருத்துவம்
பொருளாதாரத்தை அடிப்படை லட்சியமாகக்கொண்டே இன்று மருத்துவக் கல்விக்கு ஏராளமாகச் செலவிடப்படுகிறது. செய்த செலவை மீட்க மருத்துவரான பின் வணிக மயத்தை நோக்கி இன்றைய மருத்துவர்கள் செல்கின்றனர். உலகை ஆளும் பெரு வணிக நிறுவனங்களின் வசம்தான் மருந்துக் கம்பெனிகளும், மருத்துவத் துறையும் இருக்கிறது. தன் வணிக நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள மருத்துவர்கள், எவ்வித மனசாட்சியுமின்றி அந்த வணிக நிறுவனங்களோடு சமரசம் செய்துகொள்கிறார்கள். அதற்காகத் தேவையில்லாத மருத்துவப் பரிசோதனைகள், அவசியமில்லாத மருந்துகள் என்று மக்களிடம் திணிக்கிறார்கள். இதனால் மருத்துவர்கள் மீதான நம்பிக்கை மக்களிடமிருந்து விலகிக்கொண்டிருக்கிறது. ‘மருத்து வத்தை மக்களுக்கானதாக்குவோம்’ கட்டுரை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புவோம்!
- ஏ.எம். நூர்தீன்,சோளிங்கர்.
***
உலக மருத்துவத் துறையின் வியாபாரரீதியிலான போக்கையும் உலக சுகாதார நிறுவனத்தின் நிகழ் கால நடப்பையும் ஒரு மருத்துவரே கூறுவது மக்கள் மனதில் கணிசமான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். நவீன மருத்துவ உலகத்தில் நோயாளிகள் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் நுகர்வோராக மாற்றப்படுவதுகுறித்த தெளிவு சாமானிய மக்களுக்கும் போய்ச் சேரும்போது மட்டுமே அதன் பாதிப்புகள் குறையும்.
- வெண்மதிவேந்தன்,மின்னஞ்சல் வழியாக…
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago