சோழகங்கம் வளமாகும்

By செய்திப்பிரிவு

மண்ணாகிப் போன பொன்னேரி என்கிற சோழகங்கம் என்கிற கட்டுரையைப் படித்தேன்.

வீராணம், பவானி போன்ற நீராதாரங் களைத் தொடர்ந்து வந்துள்ள இக்கட்டுரை மிகவும் பபயனுள்ளது. ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராக அமைக்கும்போது நீர்ப் பயன்பாட்டுக்காக அமைத்த ஏரிதான் பொன்னேரி.

இதை ‘நீர் மயமான வெற்றித்தூண்’ என திருவாலங்காட்டுச் செப்பேடு பெருமையுடன் புகழ்ந்து பேசுகிறது. சோழகங்கம் ஏரியை தூர் எடுத்தும் கரையை உயர்த்தியும் பாதுகாத்தால், ஜெயங்கொண்டம், கங்கைகொண்டசோழபுரம் இவற்றைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்குப் பெரிதும் பயன்படும்.

கொள்ளிடம் ஆறு இவ்வூருக்குச் சற்று அருகில் ஓடுகிறது. மழைக் காலங்களில் வெள்ளம் வரும்போது அதிகப்படியான நீரைச் சோழகங்கம் ஏரிக்குத் திருப்பிவிடலாம். இதனால், கங்கைகொண்டசோழபுரம் பகுதி வளமாகும்.

- கி. ஸ்ரீதரன்,தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் (ஓய்வு), சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்