வீராணம் தொடர் பழைய நினைவுகள் சிலவற்றை மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்தியது.
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது வீராணம் ஏரியின் கீழ்மட்டமும் சிதம்பரம் பெரிய கோயிலின் கோபுர மேல்மட்டமும் சமம் என்றும், வீராணம் ஏரி உடைந்தால் சிதம்பரம் நகரம் அழிந்துவிடும் என்றும் பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள்.
அந்த காலகட்டத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு எங்களைப் பயமுறுத்தும். பின்னர், இது புனைகதைகள் என விவரம் தெரிந்த வயதில் தெளிந்தோம். வெள்ள காலங்களில் வீராணத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வாய்க்கால்களின் வழியே சிதம்பரம் நகரத்தின் தெற்குப் பகுதி வழியாகவும், வீராணத்திலிருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியே வெளியேற்றப்படும் உபரி நீர் சிதம்பரம் நகரத்தின் வடக்குப் பகுதி வழியாகவும், சென்று கடலில் கலக்கும்.
அப்போது சிதம்பரம் நகரம் நீரால் சூழப்படும். சென்னைக்குக் குடிநீர் அனுப்பிய பிறகு உபரி நீருக்கு அதிக வாய்ப்பில்லை. இருப்பினும், ஏரிக்கரையையொட்டிய பகுதிகள் மழைக் காலங்களில் பாதிப்படைவது நெடுந்தொடர் போல்தான் தொடர்கிறது.
வீராணம் ஏரி மழைக் காலங்களில் கடல்போல் காட்சியளிக்கும். குளிர் காலங்களின் மாலை வேளையில் வீராணம் ஏரிக்கரை சாலையில் மிதிவண்டியிலோ, அல்லது மெதுவாக பைக்கிலோ செல்வது இதமான அனுபவம்!
- சுந்தர. பாரதிதாசன்,பொறியாளர், மின்னஞ்சல் வழியாக…
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
51 mins ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago