உலகம் முழுவதும் மேகி நூடுல்ஸ் மீது தடைவிதிக்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் நெஸ்லே பால் பவுடரில் புழுக்கள் இருப்பதான செய்தி, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்குவரும் உணவுப் பொருட்களின் மீதான அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.
இன்றைய நூடுல்ஸ் உணவுபோல தமிழகத்தின் வடமாவட்டக் கிராமங்களில் கேழ்வரகை வேகவைத்து ‘சந்திகளி’ என்ற உணவைச் செய்துசாப்பிடுவது பிரபலம்.
அதற்குத் துணையாக வெல்லப்பாகு, வேகவைத்த அவரைப்பருப்பு, கடலைத் தூள் சேர்த்து சத்தான உணவைச் சாப்பிட்டுவருகிறார்கள்.
அரசே ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சத்துமிக்க சிறு தானியங்களை விற்பனை செய்ய வழி செய்தால் நல்லது.
- கூத்தப்பாடி கோவிந்தசாமி, தருமபுரி.
***
நோயற்ற வாழ்வுக்கு வழி செய்வோம்
நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் மற்றும் செலெக்ட் நூடுல்ஸ் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் மாநில அரசுகள் தடை விதித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று.
இளநீர், மோர் போன்ற இயற்கை பானங்களைப் புறக்கணித்துவிட்டு பெப்ஸி, கோகோ கோலா போன்ற பானங்களைப் பருகுவது உடல் நலத்துக்கு எதிரானது என்பதை யாரும் உணர்வதாகத் தெரியவில்லை. எந்த ஒரு அரசும் மக்களின் நலனைப் பாதுக்க வேண்டுமே தவிர, தொழில் முதலீடு, லாப நோக்கு ஆகியவற்றை மட்டுமே பெரிதாக நினைக்கக் கூடாது. இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுப் பொருட்களை முன்னோர் வழியில் சமைத்து, நாமும் நம் சந்ததிகளையும் நோயற்ற வாழ்வு வாழ வழி செய்வோம்.
- மு.க. இப்ராஹிம், வேம்பார்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago