முன்மாதிரி வேண்டும்

By செய்திப்பிரிவு

ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். இல்லையேல் ஆபத்துதான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதே, அதற்கு என்ன தீர்வு என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் - ஏன் நகரங்களிலும்கூட இரு சக்கர வாகனங்களில் குறைந்தது மூன்று பேர் பயணிக்கின்றனர். இதனால் ஏற்படும் விபத்துக்கள் கணக்கிலேயே வராது. இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள், இலகு ரக நான்கு சக்கர வாகனங்கள் போன்றவை ஓட்டுநர் உரிமம் இல்லாத மக்களால்தான் அதிகமாக இயக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் சட்டம் உள்ளது.

ஆனால், யாரும் பின்பற்றுவது இல்லை. விபத்து நடந்தால் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு நிவாரணம் அளிப்பது ஓட்டுக்காக என்பது அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு கட்சியாவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வருகிறதா? இந்தப் பரிதாப நிலை மாற வேண்டுமானால் அபராதம், தண்டனை மட்டும் போதாது.

மக்களைத் திருத்த வேண்டுமானால் பள்ளிப் பருவத்திலிருந்தே போக்குவரத்துபற்றிய விழிப்புணர்வு கொண்டுவர வேண்டும்.

குறைந்த பட்சம் கிராமத்திலிருக்கும் அரசாங்க அதிகாரிகள், கட்சித் தலைவர்கள், படித்த இளைஞர்கள் முன்மாதிரியாக நடந்து போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும்.

- ரேதிராஜு,இணையம் வழியாக…

***

ஒவ்வொரு தனிமனிதருக்கும் அரசுபாதுகாப்பு கொடுக்க வேண்டிய உண்மைத் தன்மையை சென்னை உயர் நீதிமன்றம் உணர்த்தியிருக்கிறது. ஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு அபராதம் முக்கியமல்ல, மனித உயிர் முக்கியம் என்பதில் உறுதியாக உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம். ஜனநாயகத்தில் சட்டதிட்டங்களை ஏற்று நடக்க வேண்டியவர்கள் அதை கடைப்பிடிக் காதபோது, சட்டங்களைக் கடுமையாக்கினால்தான் மக்கள் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பார்கள்.

- இளங்கோவன்,நன்னிலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்