ஆரோக்கியமான அரசாங்கத்தின் சிந்தனையா?

By செய்திப்பிரிவு

குடும்பத் தொழில்களில் சிறார் உழைப்பைச் சட்டபூர்வமாக்கும் இந்த மசோதா, எல்லோருக்கும் கல்வி அதுவும் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலான தரமான உயர் கல்வி என்ற கோட்பாட்டையே உடைத்தெறிந்துவிடும்.

ஒரு குடும்பம், தான் செய்யும் தொழிலில் இன்னும் ஒரு நபரை ஈடுபடுத்தினால் இன்னும் சில பத்து ரூபாய்கள் அதிக வருவாய் கிட்டுமென்றால், அங்கே முதலில் பலியாகப் போவது அந்தக் குடும்பத்தில் இருக்கும் சிறுமி அல்லது சிறுவனின் ஒட்டுமொத்த படிப்பு அல்லது அவள்/அவன் படிப்பில் செலவிடும் நேரமாகத்தான் இருக்கும்!

உயர் கல்வியிலும் மேற்படிப்பிலும் தற்போதுதான் காலூன்ற ஆரம்பித்திருக்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கு வேட்டு வைக்க நினைக்கும் இது போன்ற மசோதாக்களின் உள்நோக்கம் கேள்விக்குரியதாக உள்ளது!

சிறார்களைப் பொறுத்தவரையில் உழைப்பு என்பது அவர்கள் தங்களின் கல்விக்காகச் செலவிடும் நேரம் மற்றும் முயற்சி என்ற அளவில்தான் இருக்க வேண்டுமேயொழிய, எழுதுகோல் பிடிக்க வேண்டிய கைகள் சுத்தியலும் பிடிக்க வேண்டுமென்றோ, பாடப் புத்தகத்தை ஏந்த வேண்டிய கைகள் பீடியும் சுற்றப் பழக வேண்டும் என்றோ சொல்வது ஒரு ஆரோக்கியமான அரசாங்கத்தின் சிந்தனையாக இருக்க முடியாது!

- ராமலிங்கம் ராஜிபிள்ளை,மின்னஞ்சல் வழியாக…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்