தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் 2015-16ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் ஆரம்பமாகி விட்டது.
ஆண்டுதோறும் பொறியியல் கலந்தாய்வுக்கு முன்னதாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிறைவுசெய்யப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுவிடும்.
ஆனால், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியில் மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வழங்கப்பட்டு, செப்டம்பர் மாதத்தில்தான் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பமாவது அக்டோபர் மாதத்தில்தான். இதனால் இந்திய மருத்துவம் போன்ற மாற்று மருத்துவ முறைகள் பயில விரும்பும் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஏன் இந்தப் பாரபட்சம்? அரசின் சுகாதாரத் துறைச் செயலர் இந்த ஆண்டாவது இந்திய மருத்துவத்துக்கான கலந்தாய்வை விரைந்து முடித்து காலாகாலத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- கு. ஈஸ்வரன்,மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago