நிலம் - வாழ்க்கைக்கான பிடிப்பு!

By செய்திப்பிரிவு

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் தொடர்பாக பாஜக தமிழிசை சௌந்தரராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரது கட்டுரை படித்தேன்.

வளர்ச்சி வேண்டும் என்றால், நிலம் வேண்டும் என்று தமிழிசை கூறுவது விந்தையாக உள்ளது. நிலத்தை இழந்தவர் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து வேறொரு நிலம் வாங்கிக்கொள்ளலாம் என்பது பொறுப்பற்ற பேச்சு. நிலம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அது வாழ்க்கைக்கான பிடிப்பு என்பதை உணராமல் பேசுகிறார். ஜி.ராமகிருஷ்ணன் உதாரணமாகக் குறிப்பிடும் நோக்கியாவே நமக்குச் சிறந்த பாடம்.

- வெண்மணி மாணிக்கம்,கிருஷ்ணகிரி.

***

ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு தொழிலதிபருக்குக் கொடுத்தால் 40 பேருக்கு வேலை கொடுப்பார். ஆனால், ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் நிலம் கொடுத்தால் 400 பேருக்கு உணவளிப்பார். ஒருமுறை பெரும்புதூர் போய்ப் பாருங்கள் நோக்கியா, பாக்ஸ்கான் தொழிலாளா் குடும்பங்கள் நிலையை.

- பாணபத்திரன், ‘ தி இந்து’ இணையதளம் வழியாக…

***

அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு, வளர்ச்சி என்ற பெயரில் பயன்பெறாத திட்டங்களை மக்களிடம் திணித்துவருகிறது. எந்தத் திட்டத்தையும் மக்களிடம் கலந்து ஆலோசனை செய்து அமல்படுத்தி னால், அத்திட்டம் வெற்றி பெறும். அந்த முறையில் மக்களின் கருத்தைக் கேட்டால், விவசாயம்தான் இந்தியாவுக்குத் தேவை என்பார்கள் மக்கள்.

- நன்னிலம் இளங்கோவன்,மயிலாடுதுறை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்