காங்கிரஸ் ஆட்சியின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகத்தான் பாஜக-வுக்கு வாய்ப்பளித்தார்கள் மக்கள்.
முந்தைய ஆட்சியின் தவறுகளின் விளைவுகளைச் சரிசெய்ய பாஜக-வுக்கு இன்னும் காலம் தேவைப்படலாம்.
அதுமட்டுமின்றி இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் எதிர் கட்சிகளின் ஒத்துழைப்பும், மக்களின் ஆதரவும் இன்றி அரசினால் எந்தத் திட்டத்தையும் விரைவாகச் செயல்படுத்துவது கடினம்.
நேரடியாக எரிவாயு மானியம் வழங்கும் திட்டம், அந்நிய முதலீட்டு அதிகரிப்பு, தூய்மை இந்தியா என சில நல்ல தொடக்கங்களை பாஜக அரசு செய்திருக்கிறது. இந்த அரசின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதைக் காலம்தான் சொல்லும்!
- கோபாலகிருஷ்ணன், சென்னை.
***
மவுன முதல்வரா பிரதமர்?
மோடியின் ஓராண்டு ஆட்சி தொடர்பாகக் கருத்துப் பேழையில் இடம்பெற்ற ‘நானே ராஜா...நானே மந்திரி !' என்ற மோடி 365 டிகிரி கட்டுரை அருமை. நாடாளுமன்றப் படிக்கட்டைத் தொட்டு வணங்கி நுழைந்த பிரதமர் மோடி இன்று பறக்கும் பிரதமராக மாறி விட்ட நிலையை அழகாக விளக்கியது கட்டுரை.
குஜராத் முதல்வராக இருந்தபோது சட்டசபையில் மோடி குறைவாகவே பேசியிருக்கிறார் என்ற தகவல் முக்கியமானது. பிரதமரான பின்னரும் அவர் இவ்வாறுதான் நடந்துகொள்கிறார். அனைவருக்கும் சமமான பொறுப்புக்களை வழங்குவதே ஜனநாயகம்.
ஆனால் அமைச்சர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம், முடிவெடுப்பதும் ஆணையிடுவதும் நானே என ஒற்றை மனிதராய் மோடி செயல்படுவதில் சர்வாதிகாரத்தின் சாயல் தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
***
முதலாண்டும் முதலீடும்
இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லப்போவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசால், பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை எனும் செய்தியில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
முந்தைய அரசைக் குறை கூறிவிட்டு ஆட்சியைப் பிடித்த பாஜக அரசு, மக்கள் பிரச்சினைகளைக் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. விளைவுகள் இப்படித்தான் இருக்கும்.
- ஆ. குமரகுருபரன், மயிலாடுதுறை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago