ஒரு பள்ளியில் கட்டணம் செலுத்தாத மாணவரது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வண்ணம் நிர்வாகம் செயல்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
பள்ளி ஆண்டு தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும்போதே கட்டணம் பெறுவது சரியல்ல. வெளியூருக்கு மாற வேண்டியிருந்தால் செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற இயலாது.
பள்ளி வெறும் பாடங்களைக் கற்பிக்கும் உயிரற்ற இடமல்ல. அங்கு நல்ல பழக்க வழக்கங்கள், மற்றோரை மதிக்கும் பாங்கு போன்றவை அறிவுரையாலும் செயல்பாடுகள் மூலமாகவும் கற்பிக்கும் பண்பாட்டுக் கேந்திரமாகும்.
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாமென்ற வாக்குக்கிணங்க இப்பள்ளிகளைப் பெற்றோர் புறக்கணிக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25% ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர் பெரும்பாலோரது நிலையும் இவ்வண்ணமே அமையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பெரியவர்கள் கொஞ்சம் பொறுமையுடன் நடந்துகொள்வார்கள். குழந்தைகள் தொட்டால் சிணுங்கிகள், அவர்கள் மனதில் பட்ட காயம் ஆறவே ஆறாது.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago