கோடை உற்சாகம்

By செய்திப்பிரிவு

‘கோடை விடுமுறை - குழந்தைகளின் சுதந்திர காலம்' படித்தேன். பாடம்சாரா சுற்றுலா மற்றும் உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று இன்றைய பெற்றோர்களுக்குச் சரியான ஆலோசனையை வழங்கியுள்ளீர்கள்.

முன்பெல்லாம் விடுமுறைக் காலத்தில் குழந்தைகளைத் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, போன்ற உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றோ விடுமுறை தொடங்கும் முன்பே, கோடைக்காலப் பயிற்சியில் சேர்த்துவிடுகிறார்கள்.

குழந்தைகளைச் சொந்தக் கிராமத்தில் உள்ள நம் பெற்றோர் வீட்டுக்கோ அல்லது உறவினர்கள் வீட்டுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும். அரிசி எப்படி விளைவிக்கப்படுகிறது என்றுகூட இன்றைய நகரத்துச் சிறுவர்கள் பலருக்குத் தெரியாது.

இயற்கைச் சூழல் மற்றும் விவசாயம்குறித்த அடிப்படை அறிவை கிராமத்தில் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். கிராமத்தில் கிடைக்கும் நல்ல காற்று, சுத்தமான தண்ணீர் போன்றவை சிறுவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

குழந்தைகள் மனதில் உறவுகளின் மேன்மை மற்றும் அன்பு, பாசம் போன்றவை வளர்வதற்கும் இது உதவும்.

- ஜேவி,சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்