இப்போதாவது விழித்துக்கொள்வோம்!
டாக்டர் அம்பேத்கரின் நிலைமையில் நான் இருந்திருந்தால், அடக்கவே முடியாத கோபம் கொண்டவனாகத்தான் இருந்திருப்பேன். அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் அஹிம்சை மீது நம்பிக்கை உள்ளவனாக இருந்திருக்க மாட்டேன்.
டாக்டர் அம்பேத்கர் என்ன செய்தாலும் அதை நாம் பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் நம்மைச் செருப்பால் அடித்தாலும் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்… அவரும் அவரது மக்களும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இழந்து வேறு மதத்துக்கு மாறினாலும் அதை நமது பிராயச்சித்தம் என்றே நாம் கருத வேண்டும். நமக்கு இத்தகைய தண்டனை வேண்டியதுதான். இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு, நமது பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்.
- காந்தி
கலகத்தின் அடையாளம்
இந்து சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகத்தின் அடையாளமாக அம்பேத்கர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். மேலும், இந்து மத சட்டத் திருத்தம் தொடர்பாக அவர் காட்டிய அக்கறைக்காகவும் சந்தித்த பிரச்சினைகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். அச்சட்டத் திருத்தம் அம்பேத்கர் உருவாக்கியதைப் போல மொத்தமாக இல்லையென்றாலும், பகுதி பகுதியாக மேற்கொள்ளப்பட்டதை அவர் பார்த்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
- ஜவாஹர்லால் நேரு
மாபெரும் நஷ்டம்
இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்.
உண்மையில் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது, எந்தவிதத்திலும் சரிசெய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.
- தந்தை பெரியார், அம்பேத்கர் மறைவையொட்டி
நம்பிக்கையும் நிம்மதியும்
என்னைப் பொறுத்த வரையில், டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலில் மிகப் பெரிய மனிதர்... இந்த உண்மை, இந்து மதத்தில் சாதி முறை என்றேனும் ஒரு நாள் தகர்க்கப்படும் என்ற நம்பிக்கையையும் நிம்மதியையும் எனக்குக் கொடுத்திருக்கிறது.
- ராம் மனோகர் லோஹியா.
வளமான எதிர்காலத்தின் சூரியன்!
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் செய்தது என்ன? அம்மக்களின் கடந்த கால வாழ்க்கை இருட்டில் இருந்தது. வரலாற்றில் முதன்முறையாக, கடந்த 25 நூற்றாண்டு வரலாற்றில் அவர்களுடைய சிறப்பான எதிர்காலத்துக்கான சூரியன் அம்மக்களின் அடிவானத்தில் உதித்திருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களின் மண்ணின் மைந்தரான அம்பேத்கர், அம்மக்களின் சமூக உரிமைகள், அரசியல் உரிமைகள் மற்றும் விடுதலை தொடர்பாக உலக அளவிலான கவனக்குவிப்பை ஏற்படுத்தினார். தீண்டாமையைச் சமகாலத்தின் தீவிரமான பிரச்சினை என்பதை உணர்த்திய அவர், சர்வதேச அளவில் இப்பிரச்சினையைக் கொண்டுசென்றார். அந்த மக்களுக்கு அவர்களின் ஆன்மாவை அளித்த அவர், தங்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்பவும், நீதி, சமத்துவம், மற்றும் விடுதலைக்காகப் போராடவும் அவர்களுக்கு உத்வேகம் அளித்தார்.
- தனஞ்செய் கீர், அம்பேத்கர் சுயசரிதையை எழுதியவர்...
உயர்ந்த கல்வி
இந்திய வரலாற்றிலேயே உயர்ந்த கல்விப் பின்புலம் கொண்ட பொருளாதார அறிஞர் அம்பேத்கர்.
- நரேந்திர ஜாதவ், பொருளாதார நிபுணர்.
எனக்கு வழிகாட்டி!
எனது பொருளாதார அறிவின் தந்தை அம்பேத்கர்தான். இந்தியாவில் மிகவும் சர்ச்சைக்குரிய ஆளுமையாக அவர் கருதப்பட்டார். ஆனால் உண்மை அதுவல்ல. பொருளாதாரத் துறைக்கு அவர் ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது; என்றென்றும் நினைவில் நிற்கக் கூடியது.
- அமர்த்திய சென், பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்.
முதன்மை ஆசிரியர்!
மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த மகத்தான மனிதர் அம்பேத்கர். இந்திய அரசியல் சட்டத்தின் முதன்மை ஆசிரியர் அவர்.
- அமெரிக்க அதிபர் ஒபாமா, 2010-ல் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது…
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago