‘சகிப்பின்மைக்குக் கிடைத்த சவுக்கடி’ தலையங்கம் ‘உண்மை நின்றிட வேண்டும்’ எனும் தங்கள் கொள்கைக்கேற்ற, சரியான தலையங்கம்.
பத்திரிகைகளும் நீதிமன்றங்களும் இல்லாமல் போயிருந்தால், நாட்டில் ஜனநாயகம் என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போயிருக்கும். அந்த அளவுக்குச் சில அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
இப்படியான சூழலில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 (ஏ) பிரிவு செல்லாது எனும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கிலாந்தில், ‘யெஸ் மினிஸ்டர்’ எனும் தொலைக்காட்சித் தொடர் 1980-களில் பிரபலம்.
அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளை நகைச்சுவை கலந்து விமர்சித்த தொடர் அது. அத்தொடரை அன்றைய பிரதமர் மார்கரட் தாட்சர் விரும்பிப் பார்ப்பாராம். மேலும், அரசிடமிருந்து தொடருக்கு எந்தவித நெருக்கடியும் வரவில்லை. அந்த அளவுக்கு சகிப்புத்தன்மையுடன் தொடரை வரவேற்றார்கள். இதே மாதிரியான தொடர் ஒன்றை இன்றைய நாளில் இந்தியாவில் ஒளிப்பரப்பு செய்ய முடியுமா?
- கேசவ்பல்ராம்,திருவள்ளூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago