‘என்னம்மா, இப்படிப் பண்றீங்களேம்மா?’ - உளவியல்குறித்த அருமையான கட்டுரை. உளவியலைப் பொதுமைப்படுத்தவே நவீன அறிவியல் தொடர்ந்து முயல்கிறது. அது முற்றிலும் ஆபத்தான போக்காகும். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் தனித்தனி உலகம். அவ்வுலகுக்குள் நுழையாமல் அவரின் உளச் சிக்கல்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். அச்சிக்கல்களைப் புரிந்துகொள்ளாமல் அதற்கான தீர்வும் சாத்தியமில்லை. அதனால்தான் சாமுவேல் ஹானிமன் - ஹோமியோபதியின் தந்தை - ‘நோய்க்கு மருந்தளிப்பது தவறு. நோயின்போதான மனக்குறிகளை அறிந்து தரப்படும் மருந்தே பயன் தரும்’’ எனத் தொடர்ந்து வலியுறுத்தினார்.
காய்ச்சல் என்றவுடன் ஒரே விதமான மருந்துதான் அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. அது தவறு என்றும், அக்காய்ச்சலில் இருக்கும் நோயாளியின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டே அவருக்கு மருந்து தரப்பட வேண்டும் என்பது ஹோமியோபதியின் அடிப்படை. அது உளவியலுக்கும் பொருந்தும். மனிதகுலத்தின் ஒட்டுமொத்த உளவியல் சிக்கல்களின் அடிப்படைக் கூறுகளையும் நிச்சயம் நவீன அறிவியலால் தொகுத்துவிட முடியாது. அதை ஒப்புக்கொள்வதே அறிவுள்ள செயலுமாகும். உளவியலை அறிவுபூர்வமாக அணுகுவதிலிருந்து விடுபட்டு, உணர்வுபூர்வமாக அணுகுவதே சரியாக இருக்கும்.
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago