நீதித் துறையில் கண்ணியம் காக்கப்படட்டும்

By செய்திப்பிரிவு

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் நீதிபதி என்பவர் கடவுளுக்கு அடுத்த நிலையில் மதிக்கப்படுகிறார்.

ஒருநாட்டின் ஜனநாயகம் நீதித் துறையால்தான் தலைநிமிர்ந்து நிற்கிறது. பல நீதிபதிகள் தங்கள் சிறப்பான செயல்பாடுகளால், நீதிக்கும் சட்டத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். எனினும், ஒருசிலரின் நடவடிக்கையால் மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுகிறது.

நீதிபதியாகப் பணியாற்றிய ஒருவர், ஓய்வுபெற்ற பிறகு அரசின் துறைகளில் முக்கியப் பதவிகளை வகிக்கிறார் என்றால் பதவிக் காலத்தில் அவருடைய நேர்மை எப்படி இருந்திருக்கும் எனும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. இனி மனுநீதிச் சோழன், பாண்டிய நெடுஞ்செழியனின் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், அவர்களைப் போன்ற முன்னுதாரணங்களாக நீதிபதிகள் செயல்பட்டு, நாட்டு மக்களுக்கு நன்மை சேர்க்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும்.

- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.

***

பணிவான படைப்பாளி

திரைப்படத் துறையில் மனித நேயமிக்க ஒரு சிலரில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனும் ஒருவர். கமல், ரஜினி போன்ற உச்ச நடிகர்கள் நடித்த ஏராளமான படங்களை இயக்கியிருந்தாலும், தனது பெயருடன் அடைமொழியைச் சேர்த்துக்கொள்ளாதவர்.

தனது பயணத்தின் உச்சியில் இருக்கும்போதே புதிய திசைகளில் பயணிக்கும் திரைப்படத் துறையினைப் புரிந்து, படம் இயக்குவதை நிறுத்திக் கொண்டவர்.

ரஜினி நடித்த ‘பாண்டியன்’ தான் அவரது கடைசிப் படம். "நிலைமை மாறிவிட்டது. உழைத்த பணத்தை எடுத்துவந்து ஆர்வத்தில் திரைப்படம் எடுக்கிறார்கள். என்னால் யாரும் நஷ்டப்படக் கூடாது"என்பார். எளிமையான மனிதர். ‘தி இந்து’வில் அவர் எழுதும் ‘சினிமா எடுத்துப்பார்’ தொடரின் முதல் கட்டுரையே அருமை.

- பிரபாகரபாபு,மின்னஞ்சல் வழியாக…

கண்ணியம் காக்கப்படட்டும்

நீதித் துறையில் ஏற்படும் தவறுகள் அந்த தலைமுறையையும், கல்வித் துறையில் நிகழும் தவறுகள் அடுத்த தலைமுறையையும் வெகுவாகப் பாதித்துவிடும். சமீபகாலமாக இவ்விரு துறைகளிலும் ஒரு சில நபர்களால் நிகழும் விரும்பத்தகாத செயல்கள் ஏமாற்றம் தருகின்றன.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இன்றைய கேரள ஆளுநருமான சதாசிவம் மீது ராமச்சந்திர குஹா கூறிய விமர்சனங்கள் அனைவரின் மனதிலும் எழும் சந்தேகத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. சுயநலத் தேவைகளை மறந்து நாட்டுப்பற்றுடன் நீதிபதிகள் பணியாற்ற வேண்டும் என்பதை குஹாவின் எழுத்து உணர்த்தியது.

இதேபோல் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களும் நேர்மையும், ஒழுக்கமுமாய் வாழ்ந்து மாணவர்களுக்கு போதித்தால் இன்றைய மாணவர்கள் வருங்காலத்தில் நம் நாட்டை சீர்படச் செதுக்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

- ஜோ.எஸ்.நாதன்,கீழக்கரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்