அரசியல் சட்டத்தில் அனுமதி உண்டா?

By செய்திப்பிரிவு

‘போராடும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு’ என்ற கட்டுரை படித்தேன். உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி தொடர்ந்து மறுக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் செய்துவரும் பிரச்சாரம் தவறானது என்பதைச் சுட்டிக்காட்ட வந்த நீதிபதி சந்துரு, கீழமை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் பணி நியமனம்பற்றிய விரிவான புள்ளிவிவரங்களை ஏராளமாக அளித்துள்ளார்.

வழக்கறிஞர்களின் பிரச்சாரமும் போராட்டமும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி தேவை என்பதுதான். அந்தப் பிரச்சினைபற்றி அதிகமாக விவரிக்காமல் கீழமை நீதிமன்ற நியமனம்பற்றிய புள்ளிவிவரங்கள் பொருத்தமற்றவை. “69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லாத உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்கள்” என்று நீதிபதி சந்துரு கூறுகிறார்.

அதாவது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணி நியமனத்துக்கு இட ஒதுக்கீடு செய்யச் சட்டத்தில் இடமில்லை என்கிறார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை கொலிஜியம் என்ற நீதிபதிகள் குழுதான் இன்றுவரை மேற்கொண்டுவருகிறது. அந்த கொலிஜியம் முறை எந்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டது. அரசியல் சட்டத்தில் அதற்கு அனுமதி உண்டா என்பதை நீதிபதி சந்துரு தெரியப்படுத்தினால் நல்லது.

- பொ. நடராசன்,நீதிபதி (பணி நிறைவு),

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்