குடும்பம்: சில குறிப்புகள்

By செய்திப்பிரிவு

இந்த வாரம் ‘வியாழன் வாசிப்பு' பகுதியில், எஸ். ராமகிருஷ்ணன் பல்வேறு எழுத்தாளர்களின் குடும்பச் சூழல் பற்றிச் சில குறிப்புகளைப் பதிவுசெய்திருந்தார்.

புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் பிரேம்சந்தின் குடும்ப வாழ்க்கை குறிப்பிடத் தக்கது. ஒன்பதாம் வகுப்பு ஆண்டுத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும்போது, அவர் தந்தை அவருக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார்.

மனைவியை அழைத்துவரும்போது, முகத்திரையை விலக்கிப் பார்த்த பிரேம்சந்த் அதிர்ச்சியடைந்தார்.

அவர் தந்தையும்தான். அவருக்கு வாய்த்த மனைவி, அம்மை வடுக்கள் நிறைந்த முகத்துடன் வயதான தோற்றத்தில் காணப்பட்டார். காலில் ஊனம் வேறு. படிப்பறிவின்றி சண்டையும் சச்சரவுமாய்ச் சில காலம் வாழ்ந்துவிட்டுப் பிறந்தகம் போனவர் திரும்பவேயில்லை.

முதல் திருமணம் முறிந்துவிட்ட நிலையில், பின்னாளில் உடல் மெலிந்த 12 வயதுக் கைம்பெண்ணை மறுமணம் புரிந்த பிரேம்சந்தின் மணவாழ்வு இறுதிவரை சந்தோஷத்துடன் இருந்ததாக அவரது வாழ்க்கைக் குறிப்பு சொல்கிறது.

- சந்திரா மனோகரன்,ஈரோடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

35 mins ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்