நீட் எனும் அநீதி
நீ
ட் தேர்வுக்கு ஆதரவானவர்கள் முன்வைக்கும் வாதங்கள் படு அபத்தமாக இருக்கின்றன. நமது மருத்துவர்கள் திறமையற்றவர்கள் என்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பு முடித்தவர்கள்தான் திறமையான மருத்துவர்களாக உருவாவார்கள் என்றும் கூசாமல் பேசுபவர்களைப் பார்க்க முடிகிறது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவர்களையும் கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் மருத்துவர்கள் திறமையற்றவர்கள் என்று சொல்வதற்குக் காரணம் அறியாமையா அறிவீனமா என்று புரியவில்லை. முதலில் இது ஒரு சமூக அநீதி என்றே பலருக்குப் புரியவில்லை. நீட் தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் செல்வோர் லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. நகர்ப்புற மாணவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் இது சாத்தியமாகலாம். கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு காலத்தில் சமஸ்கிருதம் பயின்றவர்களுக்குத்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் என்ற சட்டம் ஒரு சிலருக்கு மட்டும் சாதகமாக அமைந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர்தான் அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. நீட் மூலம்தான் மருத்துவராக முடியும் எனும் நிலையும் அப்படியான ஒரு ஆபத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.
- எஸ். வெங்கடேஷ், மின்னஞ்சல் வழியாக…
இரண்டு திருத்தங்கள்
‘க
லைஞாயிறு’ பகுதியில் 27-08-2017 அன்று வெளியான கால்டுவெல்லைப் பற்றிய கட்டுரையில், தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்று அடையாளம் கண்டுகொண்டு கால்டுவெல்லுக்கு முன்பே ஆராய்ந்த எல்லீஸ் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், எல்லீஸ் திராவிட மொழிகள் என்ற கருத்தை வெளியிட்ட ஆண்டாக 1838 என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் சரியானது அல்ல. 1819-லேயே எல்லீஸ் இறந்துவிட்டார். மேலும் அக்கட்டுரையில் எல்லீஸ் ஒரு பேராசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் கிழக்கிந்திய கம்பெனியில் அரசு ஊழியராக பணியாற்றியவர். அவர் பேராசிரியராகப் பணியாற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பொ. வேல்சாமி, வரலாற்று ஆய்வாளர்.
மக்கள் மன்றத்தில் பரிசீலிக்கப்படும்!
ஆ
கஸ்ட் 28 ‘தி இந்து’ நாளிதழில் ‘உதயச்சந்திரன் அதிகார குறைப்பு மிக மோசமான நடவடிக்கை!’ தலையங்கம் படித்தேன். பாடத்திட்ட மாற்றங்கள் தொடர்பான பணிகளை மட்டும்தான் உதயச்சந்திரன் இனி மேற்கொள்ள முடியும் என்பது துரதிருஷ்டவசமானது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்த அரசு கொஞ்சமாவது கல்வியாளர்களால் பாராட்டப்பட்டது என்றால் அதற்குக் காரணம் உதயச்சந்திரன் மேற்கொண்ட ஆக்கபூர்வ நடவடிக்கையால்தான். அதுவும் தற்போது தவிடுபொடியாகிவிட்டது. ஆட்சியாளர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள இதுபோன்ற நியமனங்கள் உதவலாம். ஆனால் நாளை மக்கள் மன்றத்தில் இத்தகைய செயல்பாடுகள் முக்கியமாகப் பரிசீலிக்கப்படும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்!
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
பெண்களுக்கே அதிக உரிமை
இ
ஸ்லாத்தில் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிக முன்னுரிமை உள்ளது. ஒரு பெண் தன் கணவரை வேண்டாம் என்று மணவிலக்கு பெற எந்த காரணமும் கூற வேண்டிய கட்டாயம் கிடையாது. பெண் மணவிலக்கு கேட்டால், இஸ்லாமிய ஜமாஅத்து உடனே அப்பெண்ணுக்கு மணவிலக்கு கொடுத்தாக வேண்டும். மணவிலக்கு பெறும் பெண் தன் கணவரிடம் திருமணத்தின்போது கணவரிடமிருந்து வாங்கிய மஹரை திரும்பிக் கொடுக்க வேண்டும். இது போன்ற உரிமைகள் பெண்களுக்கு இஸ்லாத்தில் உள்ளன.
- வாஹித் மாலிமார், பாண்டிச்சேரி-10.
அளவிட முடியாத சாதனையாளர்
த
மிழ்த் திரையின் தரத்தை உயர்த்தியவர்களில் ஒருவர் எஸ். எஸ். வாசன். அவரின் திரைச் சாதனைகளை அளவிட முடியாதது. அவரின் சந்திரலேகா இன்றளவும் ஒரு பிரமாண்டமான படைப்பு. அவரின் நினைவு தினத்தில் தமிழக மக்களை நினைவுக் கூரச் செய்துள்ளார் சுதாங்கன் (ஆகஸ்ட் 22). திரைச் சிகரம் தொட்ட எஸ். எஸ். வாசனுக்கு சிறப்பான புகழஞ்சலியாக இந்தக் கட்டுரை அமைந்ததற்குப் பாராட்டுகள்!
-பொன். குமார், சேலம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago