இப்படிக்கு இவர்கள்: நிச்சயம் நன்மை பயக்காது!

By செய்திப்பிரிவு

 

க.7-ம் தேதிய ‘அரசு மருத்துவமனைகளில் தனியார் பங்கேற்பு நன்மை பயக்குமா?’ தலையங்கம் படித்தேன். நிதிஆயோக் அளித்திருக்கும் இந்தப் பரிந்துரை நிச்சயம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாகப் பாதிக்கும். தனியாரை ஊக்குவிப்பதற்காகப் பொதுமக்களின் உயிரோடு விளையாட அனுமதிப்பது, மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியாது. சில பகுதிகளை 30 ஆண்டுகளுக்கு என்று ஆரம்பித்து, கடைசியில் மருத்துவமனையின் முழு நிர்வாகமும் தனியாருக்குச் செல்லாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தற்போது மாவட்ட மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளில் தனியார் மருத்துவமனைகள் செய்ய முடியாத சாதனை சிகிச்சைகளைக்கூடச் சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. இப்படிப்பட்ட பல திறமையான மருத்துவர்களைக் கொண்ட மாவட்ட மருத்துவமனைகளுக்குள், தனியாரை நுழையவிட்டால், திறமைக்கு மதிப்பு போய் பணத்துக்குத்தான் மதிப்பு என்றாகிவிடும். நிதிஆயோக்கின் இந்தப் பரிந்துரையை மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களின் நலன் கருதி நிச்சயம் எதிர்க்க வேண்டும்.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

விருப்பங்களே,

அரசின் கொள்கைகளாக..

க.8-ம் தேதி வெளியான, ‘அரசுத்துவம் என்ற கொடிய மதம்’ என்ற கட்டுரை தமிழில் யாரும் இதுவரை எழுதாத தலைப்பு. நமது அரசு, குடியரசு என்ற நிலையிலிருந்து மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டன. பெரும்பான்மையினரின் அரசு, அவ்வளவுதான். மக்கள் விருப்பங்களை மதிக்கும் அரசுகள் பழங்கதை ஆகிவிட்டது. அவ்வப்போது வரும் ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த விருப்பங்களை அரசுக்கொள்கை முடிவுகளாக மாற்றி, அவர்கள் இருக்கும்வரை செயல்படுத்துகிறார்கள். அடுத்து வரும் அரசு அதை மாற்றுகிறது. அரசியல்வாதிகளும் ஆள்பவர்களும் அதிகாரிகளும் தங்களை மக்களுக்கு மேலானவர்களாக நினைக்கும் வரை, மக்களுக்கு மறதி இருக்கும் வரை இந்த நிலை தொடரும். இது ஒரு அபாயகரமான போக்கு. மக்களுக்கு உரிய காலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இக்கட்டுரை.

- பெருமாள், மின்னஞ்சல் வழியாக.

திரையரங்கில் விநியோகிக்கலாம்!

ன்.ரமேஷ் எழுதிய, ‘வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்க முடியுமா?’ கட்டுரை (ஆக.4) வாசித்தேன். தேசியகீதம் பாடாததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், ‘ஒருவர் தேசிய கீதம் பாடியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் எந்தச் சட்டமும் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 51-ஏ வின்படி ஒரு குடிமகன், அரசியல் அமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது’ என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டியுள்ளார் கட்டுரையாளர்.

- ஜகுபர் சாதிக், திருவிதாங்கோடு, உங்கள் குரல் வழியாக.

விலையை நிலைப்படுத்துங்கள்!

ற்போது ஏற்பட்டுள்ள வெங்காய விலை உயர்வு (ஆக. 8 தலையங்கம்) நிச்சயம் ஒரு செயற்கை விலையேற்றம்தான். ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வெங்காயமும், தக்காளியும் முதன்மையானவை. சமீபகாலமாக ஏற்பட்டுள்ள அபரிமிதமான விலை உயர்வை நினைத்தால், வெங்காயத்தை உரிக்காமலேயே அனைவரின் கண்களிலும் நீர் கொட்டுகிறது. ‘விலையை நிலைப்படுத்தும் நிதி’க்கு மத்திய - மாநில அரசுகள் உடனடியாக சமமாகப் பணம் வழங்கி, விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

- கே.ஆர்.அசோகன், கிட்டம்பட்டி.

குழப்பமற்ற தேர்வு

மீபத்தில் நடந்துமுடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களின் தரம் குறித்த அலசல் கட்டுரை (‘நாற்காலிக்கு எத்தனை கால்?’, ஆக.8) படித்தேன். தேர்வு எழுதிய ஐந்தரை லட்சம் மாணவர்களின் மொழித் திறன், கணிதம், பொதுஅறிவு போன்றவற்றில் கேட்கப்படும் கேள்விகளிலேயே பிழையும், நகைப்புக்குரிய குழப்பங்களும் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வரும் காலங்களிலாவது, சரியான நபர்களைத் தேர்வுசெய்யும் வகையில் தேர்வுகள் நடக்க வேண்டும்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்