இப்படிக்கு இவர்கள்: வேலியே பயிரை மேயலாமா?

By செய்திப்பிரிவு

வேலியே பயிரை மேயலாமா?

பொ

துத்துறை வங்கிகளைத் தேசியமயமாக்கிய சித்தாந்தங்களைப் புறந்தள்ளிவிட்டு, மத்திய அரசு இன்று பொதுத்துறை வங்கிகளைப் பலவீனப்படுத்தும் வகையில், நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. (பொதுத்துறை வங்கிகளை என்ன செய்யப்போகிறது மோடி அரசு?, ஆகஸ்ட்-22) உலகமயமாக்கல் கொள்கையால் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே வங்கிகளை மூடி பொருளாதார மந்தநிலை கண்டபோது, இந்தியாவால் அச்சிக்கலை எதிர்கொள்ள முடிந்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளிலும் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் அபரிமிதமானது. மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். இல்லையேல், வேலியே பயிரை மேய்வதற்கு இடம்கொடுத்ததாகும்.

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.

இணைந்த காரணம் இலைமறையல்ல

திமுக இரு அணிகளும் இணைந்தது ஒரு வகையில் சரி என்றாலும், அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இருவரும் சுயநலத்தின் அடிப்படையிலேயே இணைந்துள்ளனர் என்பது இலைமறையல்ல. அதனால், உருவாகியுள்ள எதிர்ப்பு அணியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதே புதிய சவால். ‘இரட்டைத் தலைமையும் ஏழு சவால்களும்’ (ஆகஸ்ட்-23) என்னும் தலைப்பில் இந்தச் சவால்களை விரிவாகத் தெரிவித்துள்ளார் ஆர்.முத்துக்குமார். இரட்டைத் தலைமை என்பது இரட்டைக் குதிரையில் சவாரிசெய்வது போன்றது. ஆபத்தில் முடியும்.

- பொன்.குமார், சேலம்.

உருமாறும் நகரம்

செ

ன்னைக்கு இடம்பெயரும் மக்கள் தேவைக்காக நகரம் மாற்றியமைக்கப்படும்போது, அதுவே பல மோசமான விளைவுகளுக்குக் காரணமாகிறது. (ஆக. 22 சென்னையெனும் பசுமைவெளி) சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களில் குப்பை அதிகளவில் கொட்டப்பட்டு நீர்நிலையும் அங்கு வலசைவரும் பறவையினங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. சதுப்பு நிலமே எப்போதும் நீரைத்தேக்கி வைத்து, நிலத்தடி நீரின் அதிகரிப்பை உறுதிசெய்கிறது. பள்ளிக்கரணை சதுப்புநிலம் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு நகரத்தில் அறிவியல் முன்னேற்றங்கள் எந்தளவுக்குப் புகுத்தப்படுகிறதோ, அதைவிட அதிகளவில் சுற்றுச்சூழல் சீர்கெடாத வண்ணம் மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

- கேசவன், அயன் கரிசல்குளம்.

எப்போது பாடம் கற்பது?

யில் விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகி, கொத்துக் கொத்தாக மக்கள் மடிவது வேதனை. ஒவ்வொரு ரயில் விபத்துக்குப் பின், ரயில்வே அமைச்சர் விசாரணைக் கமிஷன் அமைத்து, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கும், காயம் அடைந்தோருக்கும் நஷ்டஈடு அறிவிக்கிறார். ஆனால், தவறுகளிலிருந்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை. இருக்கிற ரயில் பாதைகளைச் சரியாகப் பராமரிக்காததால், நடக்கும் விபத்துகளைத் தடுக்க முடியாத நமக்கு, அதிவேக புல்லட் ரயில் தேவைதானா என்று யோசிக்க வேண்டும். ‘உயிர்களைப் பறிக்கும் ரயில் விபத்துகள் : அரசே என்ன பதில்?’ என்ற தலையங்கத்தில் (ஆக.22) குறிப்பிட்டதைப் போல ரயில்வே துறை மேம்பாடு தொடர்பாக வாய்கிழியப் பேசிவரும் மோடி அரசின் அலட்சியத்துக்கு மனித உயிர்கள் பலியாவது மன்னிக்க முடியாதது.

அ. ஜெயினுலாப்தீன், சென்னை.

மனிதம் வளரட்டும்!

.பி.யில் முசாஃபர்நகர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்தில் ஹரித்வாருக்குச் சென்ற பல யாத்ரீகர்களை முஸ்லிம்கள் காப்பாற்றினார்கள் என்ற செய்தி நம் நாட்டின் சமயங்களைக் கடந்த சகோதரத்துவத்தை வெளிப்படையாகவே காட்டுகிறது. இதே உ.பி.யில்தான் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் என்று ரயில் நிலையத்தில் ஒரு சிறுவனைப் பசு குண்டர்கள் அடித்துக் கொலை செய்ததைப் பொதுமக்கள் பலர், தடுக்க மனமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்ற பழைய செய்தியும்கூட ஏனோ நினைவில் வருகிறது.

- அ.அப்துல் ரஹீம், காரைக்குடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்