இப்படிக்கு இவர்கள்: இடமாற்றம் தவிர்க்க இயலாதது

By செய்திப்பிரிவு

இடமாற்றம் தவிர்க்க இயலாதது

தயசந்திரன் பள்ளிக் கல்விச் செயலராகத் தொடர வேண்டும் என்று குரலொலிப்பதற்கு அவரது கடந்த காலப் பணியே காரணம். எந்தப் பொறுப்பில் இருந்தாலும் நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் பணியாற்றி நற்பெயர் எடுத்துள்ளார். அரசுப் பணியில் இடமாற்றம் தவிர்க்க இயலாதது. உதயசந்திரன் தன் பணிக்காலம் முழுமையும் கல்வித்துறையிலேயே இருக்க முடியாது. பதவி உயர்வு போன்ற காரணங்களால் பெரும் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும். யார் அப்பொறுப்பில் இருந்தாலும் ஈடுபாடுடன் பணியாற்றிட வேண்டும். கல்வித் துறையில் மெத்தனமும் ஊழலும் அதிகரித்தது என்றால் துறையில் பணியாற்றுவோரும் பொறுப்பேற்க வேண்டும். அரசுப் பணியை இயந்திரம் என்பார்கள். யார் ஓட்டுநராக இருந்தாலும் இயந்திரம் ஓட வேண்டும். பொறுப்பேற்ற சில நாட்களில் அவர் கரத்தை முடக்குவது நல்ல நிர்வாகத்துக்கு அடையாளமாகாது. தலைமைச்செயலர் இதனை எவ்வாறு அனுமதித்தார்? சபாநாயகம், கார்த்திகேயன் போன்ற தலைமைச் செயலர்கள் தம் கீழ் பணியாற்றும் ஊழியர்களைக் காப்பதில் சிறந்து விளங்கியதை நினைவுகூர வேண்டும்.

-ச.சீ.இராஜகோபாலன், சென்னை-93.

உண்மையான பிரமாண்டம்!

ஜெ

மினி வாசனின் சாதனையை இன்றைய தலைமுறை அறியும் வண்ணம் சுதாங்கன் தீட்டிய நடுப்பக்க கட்டுரை அருமை. 1950-களிலேயே அவ்வளவு பிரம்மாண்டமாக "சந்திரலேகா" படம் எடுத்தது பிரமிப்பாக உள்ளது. இந்த முயற்சிக்கு அவர் பட்ட துன்பங்களையும் கஷ்டங்களையும் கட்டுரையின் மூலம் அறிந்தபோது அவரது அசைக்க முடியாத மன உறுதியை நம்மால் உணர முடிகிறது. இந்தக் காலத்தில் நவீனத் தொழில்நுட்ப உதவிகளோடு ‘பாகுபலி’ போன்ற படங்களைப் பார்த்து பிரமிக்கும் நமக்கு, எந்தவித வசதிகளுமற்ற, முழுக்க முழுக்க மனித ஆற்றலையே நம்பி எடுக்கப்பட்ட ‘சந்திரலேகா’ அந்தக் காலத்தில் படைத்த சாதனை வரலாற்று முக்கியம் கொண்டது. இந்த வெற்றி, வாசனின் தன்னம்பிக்கைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.

-அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

‘சொட்டாங்கு’ எழுத்து

பா.

ராகவன் எழுதும் ‘ருசியியல்’ தொடரைப் படிக்கும்போது, நல்ல சுவை மிகுந்த உணவை, வட்டிலில் போட்டுக்கொடுத்தால், அதைச் ‘சொட்டாங்கு’ போட்டுச் சாப்பிடும் நினைவு வருகிறது. சொட்டாங்கு என்றால், ஒவ்வொரு கவளத்தையும் உருட்டி, வாய்க்குள் வைத்து, விழுங்கி முடித்ததும், நடு நாக்கால், மேலண்ணத்தில் அழுத்தி விடுவிக்கும்போது உண்டாகும் ஒரு ஒலி. சொட்டாங்கு போட்டுச் சாப்பிடுபவர்களைப் பார்த்ததுண்டு. ஆனால், சொட்டாங்கு போட்டுக்கொண்டு எழுதுபவரை இப்போதுதான் ‘ருசியிய’லில் பார்க்கிறேன்.

-தவமணி கோவிந்தராசன், சென்னை.

மக்களாட்சிக்கு அவமானம்

‘பெ

ரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' ஆளுநரிடம் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் வலியுறுத்தல் என்ற செய்திக் கட்டுரையை (ஆகஸ்ட்-28) படித்தேன். முதல்வர் பழனிச்சாமி அவர்களின் மீது நம்பிக்கை இல்லையென்று அவருக்கு ஆதரவு வழங்கிய எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் கடந்த ஆகஸ்ட்-22 அன்று கடிதம் வழங்கியும், ஆளுநர் இன்னும் மவுனம் சாதிப்பது கவலையளிக்கிறது. அரசு அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத ஒரு முதல்வரின் ஆட்சி தொடர்வது என்பது தேர்தல் முறை ஜனநாயகத்தை அவமதிப்பதாகும்! பெரும்பான்மையை இழக்கும் எந்த அரசும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தகைய சூழலில் ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கான கால அளவும் வரையறுக்கப்பட வேண்டும்.

-க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம், திருவில்லிபுத்தூர்.

திருத்தம்

தி

ங்கள் கிழமை (ஆகஸ்ட் 28) அன்று வெளியான ‘அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை: நம்பிக்கையளிக்கும் தீர்ப்பு’ என்ற தலையங்கத்தின் முதல் பத்தியில் ‘ஜனநாயக நாட்டில் அந்தரங்க உரிமை அடிப்படை உரிமையல்ல என்றுஅரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்திருப்பதில் ஆச்சரியமில்லை’ என்று வெளியாகியிருக்கிறது. இந்த வாக்கியத்தை ‘ஜனநாயக நாட்டில் அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என்று அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்திருப்பதில் ஆச்சரியமில்லை’ என்று திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறோம்.

- ஆசிரியர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்