இப்படிக்கு இவர்கள்: பற்றி எரிகிறது பஞ்சாப்

By செய்திப்பிரிவு

பற்றி எரிகிறது பஞ்சாப்

ன்ன கொடூரம் இது? பாஜக ஆட்சியில் நாடு எதைநோக்கிச் செல்கிறது? பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, ‘குற்றவாளி’யே என்று தீா்ப்பளித்தமைக்காக அந்த சாமியாருக்கு ஆதரவான குண்டா்களால் இன்று நாடே பற்றி எரிகிறது. பஞ்ச்குலா நீதிமன்ற வளாகம் முன்பு போலி சாமியார்களின் ஆதரவாளா்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். தீா்ப்பு அறிவிக்கப்பட்டதும் அவா்கள் வன்முறையில் ஈடுபட்டனா் என்பது மதவாதிகளின் பயங்கரவாதத்தை வெளிப்படுத்தவில்லையா? சட்டத்தை, நீதியைத் துச்சமாக மதிக்கும் இந்த மதவாதக் கும்பலை வளா்த்தெடுக்கிறார்களே ஆட்சியாளா்கள்! நாடு எதை நோக்கிச் செல்கிறது?

- பாலுச்சாமி, பட்டாபிராம்.

ஒரே நம்பிக்கை

பொ

துத்துறை வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியிருப்பது மிகவும் அபாயகரமானது. பொதுத்துறை வங்கிகள் இணைப்பு பல சாதகமான பலன்களை உருவாக்கி யிருக்கிறது என்று அரசு கூறுகிறது. ஆனால், எஸ்பிஐ உடன் அதன் ஐந்து துணை வங்கிகளும், பாரதிய மகிளா வங்கியும் இணைக்கப் பட்டவுடன், அந்த வங்கி மேலும் நலிவடைந்துள்ளதாகவே தகவல்கள் வந்துள்ளன. அந்த வங்கியின் பல அலுவலகங்களும், கிளைகளும் மூடப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இன்றைய தினம் தலையாய தேவை பெருநிறுவனங்கள் வைத்துள்ள வாராக்கடன்களை வசூல் செய்வதுதான். இந்த அதிமுக்கியமான விஷயத்தில் அரசு இதுவரை சுட்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. இன்றைய தினம் சாமானிய மக்களின் ஒரே நம்பிக்கை, பொதுத்துறை வங்கிகள்தான். அந்த நம்பிக்கையை மத்திய அரசு தகர்க்கும் முயற்சிகளில் இறங்குவது நல்லதல்ல.

- ஜா.அனந்த பத்மநாபன், திருச்சி.

நடுநிலையாளர்களின் எண்ண ஓட்டம்

ட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதற் காகத் தமிழினத்துக்கு விரோதமான மத்திய அரசின் செயல்களுக்குத் துணைபோகும் பழனிசாமி-பன்னீர்செல்வம் அரசின் போக்கை சாமானியனுக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளது ‘உரிமையைப் பாதுகாக்க முடியாதவர்களுக்குப் பதவி எதற்கு, விலகுங்கள்’ என்ற நடுப் பக்கக் கட்டுரை. நடுநிலையாளர்களின் எண்ண ஓட்டத்தை அப்படியே படம்பிடித்திருந்தது. இந்த இக்கட்டான தருணத்தில் இந்த அரசு பதவி விலகினால், இவர்களுக்கு ஒரு நன்மை யும் உள்ளது. தினகரன், திவாகரன், ஸ்டாலின் போன்றவர்களால் கவிழ்க்கப்படுவதைவிட, இவர்களே விலகினால், அடுத்த தேர்தலில் வாக்கு கேட்க நல்ல ஒரு காரணமும் கிடைக்கும். தங்களைத் தியாகிகளாகவும் இவர்கள் காட்டிக்கொள்ளலாம்.

- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

ரிசர்வ் வங்கிக்கு என்ன ஆயிற்று?

குராம் ராஜன் தலைமைப்பொறுப்பில் இருந்தவரை அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கிக்குக் கட்டுப்பட்டு இருந்தன. இப்போது அவ்வாறு இல்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. பாரத ஸ்டேட் வங்கி திடீரென வங்கி வாடிக்கையாளர் குறைந்தபட்ச இருப்பாக முக்கிய நகரங்களில் ரூபாய் 5,000 மற்ற நகரங்களில் ரூபாய் 3,000 என்றும் அறிவித்தது. இது சாமானிய நடுத்தர மக்களுக்கு எவ்வளவு சிரமம் என்று வங்கியும் கவலைப்படவில்லை ரிசர்வ் வங்கியும் கண்டிக்கவில்லை மத்திய அரசும் வாய் திறக்கவில்லை. இப்போது மற்ற வங்கிகளும் ஆரம்பித்துவிட்டன. முன்பு ரிசர்வ் வங்கி, வங்கிகள் வாடிக்கையாளரைக் குறைந்தபட்ச இருப்பு வைக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தக்கூடாது என்று சொன்னது. பாரத ஸ்டேட் வங்கி சென்ற மாதம் மட்டும் ரூபாய் 125 கோடிக்கு மேல் அபராதமாக வசூலித்துள்ளதைப் பெருமையாகச் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே சேமிப்புக் கணக்கு வட்டி மிகவும் குறைவு. தற்போது மேலும் குறைத்துள்ளது. இவர்களின் உண்மையான நோக்கம்தான் என்ன? ரிசர்வ் வங்கியோ அல்லது மத்திய அரசோ விரைவில் நடவடிக்கை எடுக்குமா?

- சித.திருமுருகன், ஈரோடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்