ஜெயலலிதாவின் உரைகளை முன்வைத்து எழுதப்பட்ட ‘உரிமையைப் பாதுகாக்க முடியாதவர்களுக்குப் பதவி எதற்கு? விலகுங்கள்!’ கட்டுரை படித்தேன். இக்கட்டுரையில், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருப்பது இன்றைய சூழலில் மிகப் பொருத்தமானது. மாநிலப் பட்டியலில் உள்ளவற்றைப் பற்றி சட்டங்கள் இயற்ற முழு உரிமை மாநிலங்களுக்கு உண்டு.
பொதுப்பட்டியலில் உள்ளவற்றைப் பற்றி மத்திய அரசு முடிவுகள் எடுக்கு முன், மாநிலங்களின் ஒப்புதலைக் கேட்க வேண்டும். அவ்வாறில்லாது நடுவணரசு தானாகச் சட்டங்கள் இயற்ற முற்படுவதுதான் நீட் போன்ற பிரச்சினைகளுக்குக் காரணம். கூட்டாட்சி முறையினின்று விலகிச் செல்வது, நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும்.
மேலும், நீட் தேர்வில் தமிழகப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் தேர்ச்சி குறைவாக இருப்பதற்குப் பாடத்திட்டத்தைக் குறை சொல்கிறார்கள். ஒவ்வொரு மாணவரும் அவரது மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து சிறந்து விளங்குகிறார்கள். ஏதாவதொரு மாநிலப் பாடத்திட்டத்தையொட்டி நீட் தேர்வு அமைந்தால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர் தேர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பது விவாதப் பொருளாகாதது வருந்துதற்குஉரியது. சிபிஎஸ்இ தமிழ்நாடு கணிதப் பாடத்திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, மாநிலப் பாடத்திட்டம் மிகமிகச் சுமையேற்றப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். இதுபோலத்தான் பிற பாடங்களிலும் இருக்குமென்று கருதுகிறேன். நீதிமன்றமும் இவ்வாய்வினை மேற்கொள்ளாது தீர்ப்பு வழங்கியது நீதி மறுப்பேயாகும்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
இந்தியப் பொக்கிஷம்
ஆ
கஸ்ட் 23-ல் ‘சென்னை -378’ பகுதியில் பிரசுரமான ‘வட சென்னை: சென்னை இங்கேதான் தொடங்கியது!’ கட்டுரையில், வட சென்னையின் மகிமையை தீபா அலெக்ஸாண்டர் குறிப்பிட்டிருந்தார். நவீன யுகம் வெளிப்படுத்திய மாசு அதன் மீது படிந்தாலும், பழமை மாறாத தன் சுயத்தை அழகுடன் காட்டிக் கொண்டிருக்கிறது வட சென்னை. குறிப்பாக இருநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான தேவாலயம் ஆர்மீனியர்களின் கைவண்ணம் ஆகும். ஆர்மீனியர்களின் பாரம்பரியத்தைப் பேசும் ஒரு இந்தியப் பொக்கிஷம் என்றே இதைச் சொல்லலாம்.
- எஸ்.மைக்கேல் ஜீவநேசன், சென்னை.
செபியும் சர்ச்சைகளும்
சு
மார் 300 நிறுவனங்களுக்கு எதிராக செபி எடுத்த நடவடிக்கை சரியா, தவறா எனும் விவாதம் நடக்கிறது. அதேசமயம், செபியின் செயல்பாடுகளும்கூட சர்ச்சைக்கு அப்பாற்பட்டதல்ல. பல ஆண்டுகளுக்கு முன் ‘ஜெட் ஏர்வேஸ்’ பங்குச் சந்தையில் வந்தபோது, 10 ரூபாய் பங்கை 1,100 ரூபாய்க்குப் பட்டியலிட அனுமதி தந்தது. ஆனால், வெகு சீக்கிரமே அந்தப் பங்குகள் சரிவடைந்து, இன்றும் குறைவான மதிப்பிலேயே உள்ளன. சந்தையில் பட்டியல் இட்ட மதிப்புக்கு இன்று வரை வரவில்லை.
- ஏ.வி.நாகராஜன், புதுச்சேரி.
பாதிக்கப்படுவது மக்கள்தான்
ஆ
கஸ்ட் 23-ம் தேதி தலையங்கம், ‘அச்சுறுத்தும் டெங்கு, அரசுக்கு அக்கறை இல்லையா?’ சரியான நேரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், ஆட்சி யாளர்களுக்கு அவர்களின் பிரச்சினையே அவர் களுக்குப் பெரிதாக இருக்கும்போது, மக்களின் நலனைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? தலையங்கத்தில், ‘நகரமைப் புத் திட்டங்களில் சுகாதார அம்சங்களுக்கு உரிய கவனம் செலுத்தினால் மட்டும்தான் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவாமல் தடுக்க முடியும்’ எனும் ஆலோசனை மிகவும் சிறப்பான ஒன்று. வீடோ அல்லது மற்ற பயன்பாட்டுக்கு உரிய கட்டிடங்களோ கட்டும்போது, மேல்நிலைத் தொட்டிக்குரிய மூடிகள் மற்றும் வடிகால் வசதி ஆகியவை அவசியம்.
மேலும், சுகாதாரத் துறையுடன் ஆலோசனை செய்து அத்தியா வசியமான வரைமுறைகளை வகுக்க வேண்டும். அவை முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதையும் நகரமைப்புத் துறையினர் கண்காணித்து வந்தாலே புதிய கட்டிடங்களிலிருந்து பரவும் நோய்கள் கட்டுக்குள் வந்துவிடும். புதிய கட்டிடங்கள் கட்டும்போது அதன் உறுதித்தன்மைக்காக நீரைத் தரையில் சேமித்து வைப்பதையும் அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறதா என்பதையும் உள்ளாட்சித் துறையினர் சோதிக்க வேண்டும். சுகாதார அம்சங்களைக் கண்காணிக்காமல் விட்டுவிட்டால், பாதிக்கப்படப்போவது நம் மக்கள்தான் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago