இப்படிக்கு இவர்கள்

By செய்திப்பிரிவு

யாழ்நூலொரு பார்வை!

வி

புலானந்தர் நினைவுநாள் பதிவாக மு.இளங்கோவன் அரிய செய்திகளைத் தேடி யாழ்நூல் உருவான விதம் பற்றியும், அவரது பணி பற்றியும் விளக்கியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே ‘இன்னிசை யாழ்’ என்னும் தலைப்பில் திருச்சி கலைக்காவிரி மேனாள் முதல்வர் மார்கரெட் பாஸ்டின் ஏராளமான கோட்டோவியங்களுடன் 343 பக்க நூலாக விபுலானந்தரின் ‘யாழ்நூலொரு பார்வை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிசெய்து வெளியிட்டுள்ளார்.

- அந்தோனிகுருசு, திருச்சி.

கொடுமைக்கு முடிவு!

ம் தேசத்தின் பெருமிதங்களுக்குக் காரணமாக இருக்கும் கையால் மனித மலம் அள்ளும் கொடுமைக்கு முடிவுகட்ட மத்திய - மாநில அரசுகளின் முயற்சிகளுக்குக் குறைவில்லை. எனினும், கொடுமை தொடர்வது வேதனை. கைகளால் கழிவகற்றும் 26 லட்சம் கழிப்பறைகளில் பணிபுரிய 50 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் (தோராயமாக) பணியமர்த்தப்படுகிறார்கள். முதலில் தொழிலாளிகளின் மனப் பக்குவத்தை மாற்ற வேண்டும். மோடியின் புரட்சித் திட்டங்களுள் ஒன்றான ‘தூய்மை இந்தியா’ வெற்றிபெறவும் கையால் மலம் அள்ளும் கொடுமைக்கு முடிவுகட்டவும் மத்திய - மாநில அரசுகள் ஒற்றுமையாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

உறவுகளின் பாலம்

ருவரின் பெயர் அவரை அழைப்பதற்காகத்தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். 18.7.2017 அன்று வெளிவந்த கடவுளின் நாக்கு பகுதியில், ‘பெயரைக் கேளுங்கள்!’ கட்டுரை படித்ததும் சற்றே மனம் உறுத்தியது. இத்தனை நாட்களாக எத்தனையோ நபர்களின் பெயர்கள் எதற்குத் தேவைப்படப்போகிறது என்று கடந்து சென்றிருக்கிறோம். ஆனால், இப்போது புரிகிறது பெயருக்குள்ள ஆழம் என்னவென்று. பெயரைச் சொல்லி அழைப்போம், உறவை வளர்ப்போம்.

- க.வீர நாகேஸ்வரன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்